மேலும் அறிய
Jailer Song Release : எல்லைகளை தாண்டி வைரலாகும் காவாலா பாடல்.. தொடர்ந்து விருந்து வைக்கும் ஜெயிலர் படக்குழு!
நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுடைய தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்ஷன் வெளியாகவுள்ளது.
ஜெயிலர் பாடல்கள்
1/6

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
2/6

இப்படத்தின் முதல் பாடல் ‘காவாலா’ வெளியாகி உலகமெங்கும் சூப்பர் ஹிட் ஆனது.
3/6

அதைதொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாடல் ஹூக்கும் வெளியானது. இப்பாடல் ரஜினியின் இத்தனை ஆண்டுகால கெத்தை காட்டும் வகையில் அமைந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
4/6

இதனையடுத்து ‘காவாலா’பாடலின் தெலுங்கு வெர்ஷனான ‘காவாளி’ எனும் பாடலை தெலங்கானாவில் இருக்கும் தனியார் கல்லுரியில் வைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், மழையின் காரணமாக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இப்பாடல் இணையத்தில் 4 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
5/6

அதேபோல், காவாலா பாடலின் ஹிந்தி வெர்ஷனான ‘து ஆ தில்பாரா’ பாடலை மும்பையில் உள்ள பிவிஆர் ஐகானில் நாளை (ஜூலை 27) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
6/6

அதுமட்டுமல்லாமல், ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘ஜு ஜு பி’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
Published at : 26 Jul 2023 02:37 PM (IST)
மேலும் படிக்க





















