மேலும் அறிய
Dhanush 51: பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த ட்ரீட்..D51 அப்டேட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Dhanush 51: இன்று தனுஷ் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு தனுஷின் 51 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை சந்தோஷ கடலில் மூழ்கடித்துள்ளது.

தனுஷ்
1/6

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தனுஷ். இன்று தனுஷ் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2/6

இந்நிலையில் தனுஷின் 51 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷின் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார்.
3/6

தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கிறது.
4/6

ஏற்கனவே தனுஷின் ’வாத்தி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குநருடன் கைக்கோர்த்திருக்கும் தனுஷின் 51 ஆவது திரைப்படம் பான் இந்தியா அளவில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
5/6

இப்படம் குறித்த தகவல்கள் ஏற்கனவே பரவி வந்தாலும் கூட தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது போஸ்டருடன் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
6/6

இன்று தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.மேலும் முன்னதாக தனுஷின் 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
Published at : 28 Jul 2023 01:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion