மேலும் அறிய
Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?
Pongal release movies :பொங்கலுக்கு வெளியான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன? எந்த படம் முதலிடத்தை பிடித்துள்ளது. வாங்க பார்க்கலாம்...
பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள்
1/6

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சேப்டர் 1 , மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் நேரடியாக களத்தில் மோதிக்கொண்டன.
2/6

பொங்கல் ரிலீஸாக வெளியான இந்த நான்கு படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விகிதத்தில் எந்தெந்த படங்கள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம் :
3/6

கேப்டன் மில்லர் : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான இப்படம் 59.63 கோடி வசூலை ஈட்டி முன்னணியில் உள்ளது
4/6

அயலான் : ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, சரத் கோல்கேர், ஈஷா கோபிகர், கருணாகரன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் இதுவரையில் 59 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்களை தொடர்ந்து அயலான் திரைப்படமும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/6

மெர்ரி கிறிஸ்துமஸ் : ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார், சண்முக ராஜன், ராதிகா ஆப்தே உள்ளிட்டோரின் நடிப்பில் இந்தி மற்றும் தமிழில் வெளியான இப்படம் தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 12.5 கோடியை எட்டிய நிலையில் உலகளவில் ஒட்டுமொத்த வசூல் நிலவரம் 16 கோடியை எட்டிய நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
6/6

மிஷன் சாப்டர் 1 : ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 6 கோடியை வசூலித்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
Published at : 18 Jan 2024 01:53 PM (IST)
மேலும் படிக்க





















