Water in seas | 'கடலுக்கு தண்ணீர் வந்தது இப்படித்தான்' - விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் புதுத் தகவல்!
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தொடக்கத்தில் பூமியில் கடலெல்லாம் இல்லை
பயணிக்கும் தூரமெல்லாம் காடும், மலையும், நிலமும் நம்முடன் பயணிப்பது போல தோன்றினாலும் இந்த பூமியில் நிலத்தை விட நீரே அதிகம். கடல் என்ற மாபெரும் ஒரு பரப்புதான் பூமியை அதிகம் கவர் செய்கிறது. இன்னமும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ உயிரினங்கள் கடலில் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். கண்டுபிடிக்கப்படாத பல ரகசியங்களையும், ஆச்சரியங்களையும் பெருங்கடல்கள் வைத்திருக்கின்றன. அப்படியான பெருங்கடல்கள் தொடர்பான ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் இன்றும் தொடர்கின்றன. அந்த வகையில் பூமிக்கு இவ்வளவு தண்ணீர் வந்து எப்படி என்ற கேள்விக்கு விடை தேட தொடங்கியுள்ளனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தொடக்கத்தில் பூமியில் கடலெல்லாம் இல்லை. அதிக பனியும், விண்வெளியில் ஏற்பட்ட மேக வெடிப்புமே கடலுக்கு காரணம் என கூறப்படுகிறது. பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சியை தொடங்கிய விஞ்ஞானிகள், விண்வெளியில் இருந்து பெரும்பாலுமான தண்ணீர் கிடைத்துள்ளது.
சோலார் காற்றுதான் கடல் உருவாக காரணமாவே இருந்துள்ளது. விண்வெளியில் தூசுகள் படிந்த பெரிய மேகங்கள் உலவிக் கொண்டிருக்கும் போது அதில் ஆக்சிஜன் மூகக்கூறுகள் படும்போது அது தண்ணீராக மாறுவதாகவும், இது பெரிய அளவில் நடைபெற்றே கடல்கள் உருவாகி இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.
Are there oceans on other worlds? Yes! Earth is not alone. When you look deeper into our solar system, there are worlds we suspect have oceans hidden beneath their icy surfaces. NASA scientist Lucas Paganini is here to tell you more. https://t.co/Ev1z4KydKl pic.twitter.com/rea1MULtiI
— NASA (@NASA) December 8, 2021
க்ளாஸ்க்ளோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்ட்டின் லீ கருத்தின்படி, வெறும் விண்வெளியும்,மேக வெடிப்புமே கடலுக்கு காரணமில்லை. வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதியதும், சிறு கோள்களின் பனியும் கடலுக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். கடல் தொடர்பாக நாசா விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்