மேலும் அறிய

Pakistan New PM: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் தேர்வு

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் சில வாரங்களாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த நிலையில், பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவரின் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க் கட்சிகள் இல்லாத நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Pakistan New PM: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் தேர்வு

முன்னதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள்,  இம்ரான் கானை பதவி விலகுமாறு தொடர்ந்து வலியுறுத்தி, அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை க் கொண்டு வந்தன. ஆனால் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். எனினும் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் தரப்பு மேல் முறையீடு செய்தது. எனினும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் புதிய வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் தோல்வி அடைந்தார்.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த இம்ரான் கான் கலந்துகொள்ளவில்லை. அவரின் பிடிஐ கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
 
Pakistan New PM: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் தேர்வு

புதிய பிரதமர் மீது பண மோசடி வழக்குகள்
 
342 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வெற்றிபெற 172க்கும் அதிகமான எம்.பிக்களின் ஓட்டுகள் வேண்டும். பிடிஐ கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 174 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமரான அவர் மீது ஏராளமான பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்களாக சீனா, பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தான் தனது பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான அளவில் சீனாவையே நம்பியுள்ளது. ஆனாலும் பொருளதார நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் நெருக்கடியை குறைக்க, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று பிரதமராக இருந்த இம்ரான் கான் கோரிக்கை விடுத்திருந்தார்.

மக்களின் இந்தப் போராட்டத்திற்குப் பின்னணியில் அமெரிக்கப் படைகளின் துருப்புகள் இருப்பதாகவும் அவர் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget