மேலும் அறிய

Pakistan New PM: பாகிஸ்தான் நாட்டின் காபந்து பிரதமராகிறார் அன்வர் உல் ஹக் கக்கர்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 14ஆம் (நாளை மறுநாள்) தேதி முடிவடைய இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் காபந்து பிரதமராகிறார் அன்வர் உல் ஹக் கக்கர். பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த இவர், நாளை காபந்து பிரதமராக பதவி ஏற்க உள்ளார். 

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம்:

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 14ஆம் (நாளை மறுநாள்) தேதி முடிவடைய இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை  கலைக்குமாறு அந்நாட்டு அதிபர் ஆரிப் அலிக்கு பிரதமா் ஷெபாஸ் ஷெரீப் கடிதம் எழுதியிருந்தார்.  நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 90 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த சூழலில், காபந்து அரசை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில், தேர்தலை மேற்பார்வையிடுவதற்கான காபந்து அரசை அமைப்பதற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாசும் ஒப்புக் கொண்டனர். அதன்படி, காபந்து அரசை வழிநடத்த செனட் உறுப்பினரான உல் ஹக் கக்கர் தேர்வு செய்யப்பட்டார்.

நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான்:

பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், புதிய அரசாங்கம் அமையும் வரையில் அமைச்சர்களை நியமித்து, காபந்து அரசாங்கத்தை அன்வர் உல் ஹக் கக்கர் வழிநடத்துவார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், "பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூட்டாக கையெழுத்திட்டுள்ளனர். இது, அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்" எனக் குறிப்பிடப்பட்டது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அனுப்பிய பரிந்துரை கடிதத்திற்கு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

பாகிஸ்தான்  அரசியல்:

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிராக பெரும்பான்மை எம்பிக்கள் வாக்களித்தனர். இதனால், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேர்ந்தது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த ஒரே பிரதமர் இம்ரான் கான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். 

இதை தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தற்போதைய தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமராக பதவியேற்றார்.

பாகிஸ்தானை பொறுத்தவரையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை காட்டிலும் ராணுவமே அதிகாரம் மிக்க அமைப்பாக திகழ்கிறது. ராணுவத்தின் உதவியோடு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த இம்ரான் கான், பின்னர், ராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | மாணவிக்கு பாலியல் சீண்டல் சிக்கிய தலைமை ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து அதிரடி
ADMK Poster | செங்கோட்டையனுக்கு நன்றி” ஜெயலலிதா, ஓபிஎஸ் போட்டோ! அதிமுக உரிமை மீட்பு குழு போஸ்டர்
செங்கோட்டையனை சமாளிப்பாரா EPS?கொங்கில் பலவீனமாகும் அதிமுக? | Sengottaiyan vs EPS
டம்மியான மதராஸி 25 கோடிப்பே... பட்ஜெட்டை தொடுமா? | Rukmini | Madharaasi Collection
வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி உயிர் தப்பிய பாமக ம.க.ஸ்டாலின் ஆடுதுறை பேருராட்சியில் பரபரப்பு | PMK Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
செங்கோட்டையன் அதிரடி! எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
தமிழகத்தில் ₹489 கோடி நீர்வளத் திட்டம்: 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மைக்கு அரசு தீவிரம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
Chennai Metro: மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை நேரம் மாற்றம்!
பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி? டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு! அதிமுக-வில் நடந்தது என்ன? #TTVDhinakaran #EPS #ADMK
பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி? டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு! அதிமுக-வில் நடந்தது என்ன?
EPS vs Senkottaiyan: இபிஎஸ் தலையில் இடி.. செங்கோட்டையனை எப்படி சமாளிப்பார் எடப்பாடியார்?
EPS vs Senkottaiyan: இபிஎஸ் தலையில் இடி.. செங்கோட்டையனை எப்படி சமாளிப்பார் எடப்பாடியார்?
Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Asia Cup 2025: ஆசியக் கோப்பை - இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்கள் யார்? தோனி,ரோகித்தின் சம்பவம்
Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Embed widget