Affordable Automatic Cars: இவ்ளோ கம்மி விலையில் ஆட்டோமேடிக் கார்களா.. 24 கிமீ மைலேஜ், டாப் 5 லிஸ்ட்
Affordable Automatic Cars: ஈஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும், ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Affordable Automatic Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும், டாப் 5 ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கார்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
டாப் 5 மலிவு விலை ஆட்டோமேடிக் கார்கள்
இந்திய சந்தையில் ஆட்டோமேடிக் கார்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நகரங்களில் நிலவும் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், தொடர்ந்து கியர்களை மாற்றும் தொந்தரவு இல்லாமல் ஓட்டும் கார்களை சொந்தமாக்குவது மக்களுக்கு நல்ல தேர்வாக மாறியுள்ளது. ஆட்டோமேடிக் கார்கள் ஒரு காலத்தில் அதிக விலையை கொண்டிருந்தன. ஆனால் இன்று 2025 ஆம் ஆண்டில், பல பிராண்டுகள் நல்ல மைலேஜ் வழங்கும் குறைந்த விலை ஆட்டோமேடிக் ஆப்ஷன்களை வழங்குகின்றன. அந்த வகையில் இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேடிக் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 2025
புத்தம் புதிய மாருதி ஸ்விஃப்ட் 2025 ஆட்டோமேட்டிக் (AMT) ஆப்ஷனுடன் வந்துள்ளது, இதன் மூலம் நகரத்தில் சீரான பயணத்தை எளிதாக்குகிறது. மைலேஜ் லிட்டருக்கு சுமார் 24 கிமீ ஆக கவனத்தை ஈர்க்கிறது. மற்ற அம்சங்களில் தொடுதிரை, கனெக்டட் தொழில்நுட்பம் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற மிக நவீன வசதிகளும் அடங்கும். மலிவு மற்றும் நடைமுறைத்தன்மையின் நல்ல கலவையாக ஸ்விஃப்ட் விளங்குகிறது. அதன்படி இதன் ஆட்டோமேடிக் எடிஷனின் ஆன் - ரோட் எடிஷனின் விலை சென்னையில் 9.28 லட்சத்தில் தொடங்குகிறது.
2. டாடா பஞ்ச் ஆட்டோமேடிக்
டாடா பஞ்ச் 2025 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாகும், அதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அதன் பாரம்பரியத்தைத் தொடர்கிறது. அதன் தோற்றம் மிகவும் கரடுமுரடானது, பொதுவான எஸ்யூவி வார்ப்பில் செய்யப்பட்டு, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேபின் ஸ்பேஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இவை அனைத்தும் பஞ்ச் ஆட்டோமேடிக் எடிஷனை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தக்கூடிய வாகனமாக மாற்றுகின்றன. அது ஒரு அன்றாட பயணமாக இருந்தாலும் சரி, வார இறுதி பயணமாக இருந்தாலும் சரி - 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்குய்டன் இந்தப் பிரிவில் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. பஞ்சின் ஆட்டோமேடிக் எடிஷனின் ஆன் - ரோட் விலை சென்னையில் ரூ.9.31 லட்சத்தில் தொடங்குகிறது. இது லிட்டருக்கு சுமார் 18.8 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
3. ஹுண்டாய் எக்ஸ்டெர் ஆட்டோமேடிக்
ஹூண்டாய் எக்ஸ்டர் ஸ்டைலையும் வசதியையும் ஒருங்கிணைக்கிறது. நகரங்களின் குறுகலான இடங்களில் கூட கையாள்வதற்கு எளிதான கார் மாடலாக உள்ளது. சன்ரூஃப், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. அவை பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்டதாக இந்த காரை மாற்றுகிறது. மைலேஜ் அதன் மீதான கவனத்தை ஈர்க்கும் மற்றொரு அம்சமாகும், இது குடும்பங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த காரின் ஆட்டோமேடிக் எடிஷனினாந்ரோட் விலை சென்னையில் 9.96 லட்சத்தில் தொடங்குகிறது. இது லிட்டருக்கு 19.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
4. ரெனால்ட் க்விட் ஆட்டோமேடிக்
நடப்பாண்டின் சந்தை சூழலில் முதல் முறையாக கார் வாங்குபவருக்கு, ரெனால்ட் க்விட்டின் ஆட்டோமேடிக் எடிஷன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியாவின் மலிவான ஆட்டோமேடிக் கார்களில் இதுவும் ஒன்றாகும். டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஒரு சிறிய ஹேட்ச்பேக்கிற்கு ஏற்ற இடவசதியுடன் கூடிய சிறிய ஆனால் நவநாகரீக வடிவமைப்பை கொண்டு, தினசரி நகர பயணத்திற்கு ஏற்றதாக உள்ளது. க்விட்டின் ஆட்டோமேடிக் எடிஷனின் ஆன் - ரோட் விலை சென்னையில் 6.63 லட்சத்தில் தொடங்குகிறது. மேலும், லிட்டருக்கு 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
5. மாருதி சுசூகி பலேனோ ஆட்டோமேடிக்
மாருதி பலேனோ கார் மாடலானது ஒரு ஹேட்ச்பேக் ஆகும். இதன் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை பொறுத்தவரை மிகவும் மென்மையானது. விசாலமான கேபின், நவீன கூறுகள் மற்றும் ஈர்க்கக்கூடிய மறுவிற்பனை மதிப்புடன், மலிவு விலையில் சற்று பிரீமியம் உணர்வை விரும்புவோருக்கு பலேனோ ஒரு சிறந்த தேர்வாகிறது. இந்த காரின் ஆட்டோமேடிக் எடிஷனின் ஆன் - ரோட் விலை சென்னையில் 9.67 லட்சமாக உள்ளது. மேலும், லிட்டருக்கு சுமார் 22.9 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















