சாலை முழுவதும் சிதறிய செக்ஸ் பொம்மைகள்! பாலியல் சாதனங்கள்! நெடுஞ்சாலையில் விபத்து!
ஓக்லஹோமா நகரில் ஒரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட டிரக் விபத்தில் பாலியல் பொம்மைகள் மற்றும் டில்டோஸ் என்னும் பாலியல் சாதனங்கள் சாலையில் சிதறி கிடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஓக்லஹோமா நகரில் ஒரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட டிரக் விபத்தில் பாலியல் பொம்மைகள் மற்றும் டில்டோஸ் என்னும் பாலியல் சாதனங்கள் சாலையில் சிதறி கிடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த புதன்கிழமை ஓக்லஹோமா நகரின் புறநகரில் உள்ள முஸ்டாங்கிற்கு அருகில் உள்ள I-40 நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெரிய டிரக் கொண்ட லாரியும், மற்றொரு லாரியும் மோதிக் கொண்டு கவிழ்ந்தது. இதன் காரணமாக அந்த பெட்டியில் இருந்த பாலியல் பொம்மைகள் மற்றும் டில்டோஸ் என்னும் பாலியல் சாதனங்கள் சாலையில் சிதறின.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், டிரக் கவிழ்ந்ததில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பல பாதைகளை மூட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
டிராக்டர்-டிரெய்லர் விபத்தில் சிக்கி வீணாகப் போன பாலியல் பொம்மைகள் மற்றும் டில்டோஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அந்த அடல்ட் நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் டேரின் பார்க்கர் வெளியிட்ட அறிக்கையில், “ இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது மன்னிப்புகள். இவை அழுத்தமான நேரங்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த பொருட்கள் மக்களுக்கு எவ்வளவு சுமைகளை குறைக்கும் என்று எங்களுக்கு தெரியும். எங்கள் லாரிகள் வந்து கொண்டிருக்கின்றனர். எந்த நேரத்திலும் நிவாரணம் அளிக்கும்." என்று தெரிவித்தார்.
Uhm… it looks like this wrecked semi spilled a load of dildos and lube all over I-40! Great camera work, @news9! pic.twitter.com/bdFh3hGuNs
— The Lost Ogle (@TheLostOgle) September 15, 2022
KWTV-News என்ற உள்ளூர் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் இந்த விபத்துக்குள்ளான காட்சியை ஹெலிகாப்டர் மூலம் ஒளிப்பரப்பு செய்தது. அப்போது அந்த செய்தி நிறுவனத்தின் ஆங்கர் லேசி லோரி 'ஜிம், அவர் அங்கு என்ன எடுத்துச் செல்கிறார் என்று சொல்ல முடியுமா? சாலை முழுவதும் என்ன இருக்கிறது?' என்று கேட்டார், அதற்கு விமானி பதிலளித்தார்: "அது எதுவாக இருந்தாலும், அதை சுத்தம் செய்ய சிறிது நேரம் ஆகும்." என்று சிரித்துக்கொண்டே சொன்னார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.