மேலும் அறிய

Thiruvarur : மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

தேரோட்டதிற்கு பிறகு அம்பாள் தேரோட்டத்திற்காக 4 மாதங்கள் கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது. இதனால் மழையில் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.  

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டது, அதன்படி கடந்த 2019 ஆண்டு ஆழத்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

Thiruvarur :  மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்ட விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி ஆழித்தேரின் கூரைகள் பிரிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி, தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடைபெற்றது. தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடைபெற்றது. இதனையடுத்து ஆடிப்பூர விழா அம்பாள் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும்.

இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து செல்லும்போது இடையூராக அமையும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் லேசாக உரசினால், கண்ணாடி சேதமடையும் நிலை உள்ளது. இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதிக்காக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளால் மூடப்பட்டது. இதனையடுத்து ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி தற்காலிக கூரை பிரிக்கப்பட்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது.

Thiruvarur :  மந்தமாக நடக்கும் கண்ணாடி கூண்டு பணி..! மழையில் நனையும் திருவாரூர் தேர்..! பக்தர்கள் கவலை..

சுமார் 2 மாதங்கள் ஆன நிலையில் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதில் மேற்பகுதி கூரை போடப்பட்ட நிலையில் நான்கு புறங்களில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் சரிவர கண்ணாடி கூண்டுகள் பொறுத்தாததால் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ரூ.40 லட்சம் மதிப்பில் அழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேரோட்டத்திற்கு கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்ட நிலையில், தேரோட்டதிற்கு பிறகு அம்பாள் தேரோட்டத்திற்காக 4 மாதங்கள் கண்ணாடி கூண்டு அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த கண்ணாடி கூண்டு ஆழித்தேருக்கு ஆண்டிற்கு 5 மாதங்கள் கூட பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த கண்ணாடி கூண்டு அமைப்பதில் சிரமங்கள் இருந்து வருகிறது. பிரதான சாலை ஆழித்தேர் உள்ளதாலும், கண்ணாடி கூண்டிற்கான வடிவமைப்பு சரிவர திட்டமிடப்படவில்லை. இதனால் கண்ணாடி கூண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை இருஎனவே வரலாற்று சிறப்புமிக்க தேரை பாதுகாத்திட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ: ரோகித் பாய்ஸ்  ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
IND vs NZ: ரோகித் பாய்ஸ் ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு
மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ
மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ: ரோகித் பாய்ஸ்  ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
IND vs NZ: ரோகித் பாய்ஸ் ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு
மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ
மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
Watch Video: இதுதான் கெத்தா..! பேண்டை கழற்றி பிஎம்டபள்யூ கார் ஓனர் செய்த சம்பவம் - கொத்தாக தூக்கிய போலீசார்
Watch Video: இதுதான் கெத்தா..! பேண்டை கழற்றி பிஎம்டபள்யூ கார் ஓனர் செய்த சம்பவம் - கொத்தாக தூக்கிய போலீசார்
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
Embed widget