ஹோலி கொண்டாட்டம்.. பேரன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய பாட்டி!
மார்ச் 3ம் தேதி ஹோலி பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் 4 வயது சிறுவன் மீது ஆத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் ஹோலி கொண்டாடிய பேரனின் செயலால் கோபமடைந்த அவனது பாட்டி கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹோலி பண்டிகையில் அதிர்ச்சி சம்பவம்
மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கோரடி பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதி ஹோலி பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது ஆராம்ஷின் பகுதியின் 2வது வார்டில் ஓம் ஹரிஷ் வாங்கே என்ற 4 வயது சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே ஹோலி பண்டிகை கொண்டாடி கொண்டிருந்தான். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலர் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.
அப்போது ஓம் ஹரிஷ் வாங்கே பாட்டி வெளியே ஒரு வாளியில் சுடு தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் மீது கலர் பொடி தண்ணீரை சிறுவன் ஊற்றியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவனது பாட்டி சிந்து தாக்கரே கையில் வைத்திருந்த கொதிக்கும் தண்ணீரை கொஞ்சம் கூட யோசிக்காமல் சிறுவன் மீது ஊற்றி விட்டார். சுடு தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்தான். இதனையடுத்து தான் சுடு தண்ணீர் கொண்டு வந்ததை உணர்ந்து பதறிப்போன சிந்து அருகே இருந்த பெண் வைத்திருந்த வாளியை வாங்கி சிறுவன் மீது ஊற்றி எரிச்சலை தணித்தார்.
பேரன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய பாட்டி!ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்https://t.co/wupaoCzH82 | #holi #Maharashtra #Nagpur #Viralvideo pic.twitter.com/nQd13otvP3
— ABP Nadu (@abpnadu) March 5, 2026
எனினும் இந்த சம்பவத்தில் ஓம் ஹரிஷ் வாங்கே இடுப்புக்கு கீழே பலத்த தீக்காயம் ஏற்பட்டது. நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 45 சதவீத தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிந்து தாக்கரேவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரிபுராவில் நடைபெற்ற சம்பவம்
திரிபுராவில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 206 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ.5.6 லட்சம் அபராதம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,மேலும் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது என மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















