மேலும் அறிய

Anbumani : ’மாணவர்களுக்கு சான்று கிடைக்கல’ திமுக அரசுக்கு அக்கறை இல்லையா?- அன்புமணி சரமாரி கேள்வி

"வருவாய்த்துறையினரின் போராட்டத்திற்கு திமுக அரசு தீர்வு காணாததால் மாணவர்களுக்கும், உழவர் பெருமக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை"

தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, சாதி சான்று, வருமான சான்று உள்ளிட்டவைகள் மாணவர்களுக்கு கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக அரசு இதில் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி அறிக்கை

அந்த அறிக்கையில், ”தமிழ்நாட்டில் சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் பத்தாம் நாளாக இன்றும் தொடரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேச திமுக அரசு இன்றுவரை முன்வரவில்லை. இந்தப் போராட்டத்தால் தேவையான சான்றுகள் கிடைக்காமல் மாணவர்களும், உழவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய்த்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அரசு எந்திரம் முடங்கியுள்ளது - அன்புமணி

வருவாய்த்துறையினரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதுவரை வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தர வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் காலமுறை ஊதியம், குத்தகை முறை நியமனங்கள் கூடாது என்பன உள்ளிட்ட வருவாய்த்துறை பணியாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை. அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழ்பவர்களும், பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்குபவர்களும் வருவாய்த்துறையினர் தான். அவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அரசு எந்திரம் முடங்குவதுடன், பொதுமக்களுக்கு எந்த சேவையும் கிடைக்காது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

திமுக அரசு அடக்குமுறை – அன்புமணி சரமாரி புகார்

வருவாய்த்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள 42,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த மாதம் 24&ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவர்களை அழைத்து அரசு பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை திமுக அரசு செய்யவில்லை. வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் மாணவர்களுக்கும், உழவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கடந்த 28&ஆம் தேதி விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன். அப்போதும் திமுக அரசு விழித்துக் கொள்ளவில்லை. அதனால், போராட்டத்தைத் தீவிரப்படுத்திய வருவாய்த்துறை பணியாளர்கள் நேற்று முதல் சாலைமறியல் போராட்டத்தையும் நடத்தத் தொடங்கியுள்ளனர். அப்போதும் அவர்களை அழைத்துப்  பேசாத திமுக அரசு, அவர்களை கைது செய்வது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

வருவாய்த்துறையினரின் போராட்டத்திற்கு திமுக அரசு தீர்வு காணாததால் மாணவர்களுக்கும், உழவர் பெருமக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்  தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 8&ஆம் தேதி கடைசி நாளாகும். அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் தேவையான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை வருவாய்த்துறையினர் தான் வழங்க வேண்டும். இதற்காக பல நாள்களுக்கு முன்பே அவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும், வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்தச் சான்றிதழ்கள் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

விவசாயிகளும் வேதனை

அதேபோல், உழவர்கள் உற்பத்தி செய்த நெல்லை  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் போது, தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தான் அந்த நெல் விளைவிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான அடங்கல் ஆவணத்தை  கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்றுத்  தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளின் போராட்டத்தால் இந்த சான்றிதழ்களை உழவர்கள் தாக்கல் செய்ய முடியாததால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 10 ஆயிரம் மூட்டைகள் வீதம் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், இவை குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டத்தை திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

திமுக அரசு செய்வது அநீதி - அன்புமணி

வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை திமுக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இக்கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4&ஆம் தேதி வருவாய்த்துறை பணியாளர்களுடன் அத்துறையின் அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் மற்றும் துறையின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். அப்போது இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட ஆட்சியாளர்கள், இப்போது அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அநீதியானது.

திமுக ஆட்சியால் நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், யாருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றாத  திமுக அரசு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற வெற்று முழக்கத்தை மட்டும் எழுப்பி வருகிறது. திமுக அரசு மக்களுக்கு மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கும் எதையும் செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திமுக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பது ஒருபுறமிருக்க, மாணவர்கள், உழவர்கள் ஆகியோரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, வருவாய்த்துறையினரை அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
"விஜய் அரசியலுக்கு வருவது பெரிய மாற்றம்" - ராம்தாஸ் அத்வாலே அதிரடி கருத்து...
நான் ஒன்றும் நிதிஷ் குமார் அல்ல! - டீக்கடையில் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ‘ஷாக்’ பதில்!
நான் ஒன்றும் நிதிஷ் குமார் அல்ல! - டீக்கடையில் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ‘ஷாக்’ பதில்!
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஜனநாயகத்தை காக்க தி.மு.க. கூட்டணி வெல்லும்!" சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!
"மேடையை விட்டு இறங்க மாட்டார்" விமர்சனம் செய்த அன்புமணி; களத்தில் இறங்கி பதிலடி கொடுத்த விஜய்
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
"விஜய் அரசியலுக்கு வருவது பெரிய மாற்றம்" - ராம்தாஸ் அத்வாலே அதிரடி கருத்து...
Embed widget