மேலும் அறிய

Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு: அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி

வருவாய்த்துறையினரை அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் பத்தாம் நாளாக இன்றும் தொடரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேச திமுக அரசு இன்றுவரை முன்வரவில்லை.

திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இந்தப் போராட்டத்தால் தேவையான சான்றுகள் கிடைக்காமல் மாணவர்களும், உழவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய்த்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

வருவாய்த்துறையினரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதுவரை வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தர வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் காலமுறை ஊதியம், குத்தகை முறை நியமனங்கள் கூடாது என்பன உள்ளிட்ட வருவாய்த்துறை பணியாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை.

அரசு எந்திரம் முடங்கும்

அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழ்பவர்களும், பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்குபவர்களும் வருவாய்த் துறையினர்தான். அவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அரசு எந்திரம் முடங்குவதுடன், பொதுமக்களுக்கு எந்த சேவையும் கிடைக்காது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வருவாய்த்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள 42,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவர்களை அழைத்து அரசு பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை திமுக அரசு செய்யவில்லை. வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் மாணவர்களுக்கும், உழவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கடந்த 28ஆம் தேதி விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதா?

அப்போதும் திமுக அரசு விழித்துக் கொள்ளவில்லை. அதனால், போராட்டத்தைத் தீவிரப்படுத்திய வருவாய்த்துறை பணியாளர்கள் நேற்று முதல் சாலை மறியல் போராட்டத்தையும் நடத்தத் தொடங்கியுள்ளனர். அப்போதும் அவர்களை அழைத்துப்  பேசாத திமுக அரசு, அவர்களை கைது செய்வது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

வருவாய்த் துறையினரின் போராட்டத்திற்கு திமுக அரசு தீர்வு காணாததால் மாணவர்களுக்கும், உழவர் பெருமக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 8ஆம் தேதி கடைசி நாளாகும்.

இன்னும் வழங்கப்படவில்லை

அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் தேவையான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை வருவாய்த்துறையினர் தான் வழங்க வேண்டும். இதற்காக பல நாள்களுக்கு முன்பே அவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும், வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்தச் சான்றிதழ்கள் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

அதேபோல், உழவர்கள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் போது, தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தான் அந்த நெல் விளைவிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான அடங்கல் ஆவணத்தை  கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்றுத்  தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளின் போராட்டத்தால் இந்த சான்றிதழ்களை உழவர்கள் தாக்கல் செய்ய முடியாததால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 10 ஆயிரம் மூட்டைகள் வீதம் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், இவை குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டத்தை திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை திமுக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இக்கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வருவாய்த்துறை பணியாளர்களுடன் அத்துறையின் அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் மற்றும் துறையின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். அப்போது இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட ஆட்சியாளர்கள், இப்போது அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அநீதியானது.

நம்ப வைத்து ஏமாற்றுவதா?

திமுக ஆட்சியால் நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், யாருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றாத திமுக அரசு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற வெற்று முழக்கத்தை மட்டும் எழுப்பி வருகிறது. திமுக அரசு மக்களுக்கு மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கும் எதையும் செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது.

வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பது ஒருபுறமிருக்க, மாணவர்கள், உழவர்கள் ஆகியோரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, வருவாய்த்துறையினரை அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget