மேலும் அறிய
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... பொதுமக்களே தவறவிடாதீர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் 834285 ஆண் வாக்காளர்களும், 857251 பெண் வாக்காளர்களும், 223 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1691759 வாக்காளர்கள் உள்ளனர்.
![இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... பொதுமக்களே தவறவிடாதீர்கள் Villupuram the presence of authorized political party representatives draft voter list இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... பொதுமக்களே தவறவிடாதீர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/29/d29e1949d66416a5b7a06005ee4a53b01730195234711113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு
Source : ABP NADU
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று (29.10.2024) வெளியிட்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரிலும் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுரையின்பேரிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 01.01.2025-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் 07 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 8,34,285 பெண் வாக்காளர்கள் 8,57,251 இதர வாக்காளர்கள் 223 உட்பட மொத்தம் 16,91,759 வாக்காளர்கள் உள்ளனர்.
தொடர் திருத்தம் 2024 வரைவு வாக்காளர் பட்டியல் எண்ணிக்கை விவரம் 29.10.2024-ன் படி,
70. செஞ்சி சட்டமன்ற தொகுதியில், 126362 ஆண் வாக்காளர்களும், 130238 பெண் வாக்காளர்களும், 33 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 256633 வாக்காளர்களும்,
71. மைலம் சட்டமன்ற தொகுதியில், 107085 ஆண் வாக்காளர்களும், 107647 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 214752 வாக்காளர்களும்,
72. திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதியில், 113424 ஆண் வாக்காளர்களும், 117635 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்கள என மொத்தம் 231077 வாக்காளர்களும்,
73. வானூர் (தனி) 112708 ஆண் வாக்காளர்களும், 117532 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 230259 வாக்காளர்களும்,
74. விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில், 127425 ஆண் வாக்காளர்களும், 133791 பெண் வாக்காளர்களும், 72 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 261288 வாக்காளர்களும்,
75. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், 117684 ஆண் வாக்காளர்களும், 121183 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 238896 வாக்காளர்களும்,
76. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில், 129597 ஆண் வாக்காளர்களும், 129225 பெண் வாக்காளர்களும், 32 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 258854 வாக்காளர்கள் என மொத்தம் 834285 ஆண் வாக்காளர்களும், 857251 பெண் வாக்காளர்களும், 223 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1691759 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 01.01.2025-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணியின் கீழ் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கு விரும்பும் வாக்காளர்கள் படிவம்-6லும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6A-லும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எர் ணைக்க படிவம்-68-லும், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7-லும், பெயர், வயது, பாலினம், உறவுமுறை, கதவு எண், முகவரி முதலிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வாக்காளர்களின் வசிப்பிடம் மாற்றுதல், வேறு சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் வசிப்பிடம் மாற்றம் ஆகியவைகளுக்கு படிவம்-8-லும் சிறப்பு முகாம்களின் போது மனுக்களைக் கொடுத்துக்கொள்ளலாம்.
மேலும் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 70.செஞ்சி, 71.மைலம், 72.திண்டிவனம் (தனி), 73.வானூர் (தனி), 74.விழுப்புரம், 75.விக்கிரவாண்டி மற்றும் 76.திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1088 வாக்குச்சாவடி அமைவிடங்களில் (1970 வாக்குச்சாவடிகள்) 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நாட்களில் வாக்குச்சாவடியில் பணியில் இருக்கும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் (Booth Level Officer) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்காளர்கள் கொடுத்துக் கொள்ளலாம். மேலும் படிவம் 6-ல் பெயர் சேர்த்தலுக்கான படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாகப் பிறப்புச் சான்று அல்லது கல்லூரி, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இருப்பிடத்திற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடத்தைக் குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் நகல் இவைகளின் ஏதேனும் ஒரு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண்.1950-ஐ தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நல்ல வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion