மேலும் அறிய
Advertisement
கல்வி பயிலும்போதே மாணவர்கள் தொழில் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் - வீர முத்துவேல்
படிக்கும் போதே என்ன செய்ய போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும், குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி மாணவர்கள் இருக்ககூடாது - வீர முத்துவேல்
விழுப்புரம்: கல்வி பயிலும்போதே மாணவர்கள் தொழில் திறன்களை வளர்த்து கொள்ளவேண்டும் என்றும் குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி மாணவர்கள் இருக்ககூடாது என சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்திலுள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் டிப்ளமோ தொழிற்கல்வி பயின்ற சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கல்லூரியின் 40 ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய வீரமுத்துவேல், மாணவர்கள் கல்வி பயிலும்போதே தொழில் திறன்களை வளர்த்து கொள்ளவேண்டும் என்றும் குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி மாணவர்கள் இருக்ககூடாது என தெரிவித்தார்.
பொறியியல் படிப்பு நேரடியாக சேருவதற்கு பதிலாக தொழிற்கல்வி (பாலிடெக்னிக்) பயின்றுவிட்டு பொறியியல் படிப்பிற்கு சென்றதால் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கல்வி கற்கும் போது எது செய்தாலும் அதனை புரிந்து செய்ய வேண்டுமெனவும் கல்லூரியில் பயிலும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் சுமாராக படிக்கும் மாணவர்கள் சரியாக படிக்காத மாணவர்கள் என மூன்று தரப்பு மாணவர்களோடு பயணித்ததாகவும் படிக்கும் போதே என்ன செய்ய போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தினால் விண்வெளி ஆராய்ச்சி துறைக்கு சென்றதாக கூறினார். மாணவர்களுக்கு என்ன செய்ய போகுறோம் என்பதில் ஆசிரியர்கள் தெளிவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion