மேலும் அறிய

திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி: ராமதாஸ் அறிவிப்பால் குழம்பும் ஆதரவாளர்கள்!

பாமக கூட்டணி திராவிட கட்சிகளுடன் தான் இருக்கும் வருகின்ற 28ஆம் தேதிக்குள் யாருடன் கூட்டணி என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமென பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் : பாமக கூட்டணி திராவிட கட்சிகளுடன் தான் இருக்கும் வருகின்ற 28ஆம் தேதிக்குள் யாருடன் கூட்டணி என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமென பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாமகவில் மருத்துவர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் மோதலாக வெடித்ததை தொடர்ந்து பாமகவில் இருந்து தனது மகன் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். இதனால் பாமகவில் மருத்துவர் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னை பாமகவின் தலைவராக அறிவிக்க கோரி மருத்துவர் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய தேர்தல் ஆணையம், தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணியை பாமகவின் தலைவராக அங்கீகரிப்பதாக தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும், பாமகவின் கொடி மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மருத்துவர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே அன்புமணி தரப்பு பாமக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இந்நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து தனது தரப்பு பாமக மற்றும் வன்னியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்திற்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் , யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து தற்போது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பிறகே எந்த வாகனத்தில் ஏறி பயணிக்க இருக்கிறோம் என்பது குறித்து தெரிய வரும். இதுவரை கூட்டணிக்கான சூழல் அமையவில்லை என தெரிவித்தார்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இருக்கும் என்று தெரிவித்த அவர் வருகின்ற 28ஆம் தேதிக்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget