உலகமே உற்றுநோக்கும் ஆன்மீகச் சங்கமம்: பிரதமர் மோடி தலைமையில் ஆரோவில்லில் உலக ஆன்மீக மகோத்சவம்!
2-வது உலக ஆன்மீக மகோத்சவம் (Global Spirituality Mahotsavam) வரும், மார்ச் 1 முதல் 3 வரை புதுச்சேரி மற்றும் ஆரோவில்லில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

ஆரோவில்: பாரதத்தின் ஆன்மீகப் பெருமையையும், தேசக் கட்டமைப்பின் உன்னத சங்கமத்தையும் உலகுக்கு பறைசாற்றும் வகையில், 2-வது உலக ஆன்மீக மகோத்சவம் (Global Spirituality Mahotsavam) வரும் 2026, மார்ச் 1 முதல் 3 வரை புதுச்சேரி மற்றும் ஆரோவில்லில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்தியாவின் ஆன்மீகப் பெருமையையும், தேசக் கட்டமைப்பின் உன்னதத்தையும் உலகுக்கு பறைசாற்றும் வகையில், 2-வது உலக ஆன்மீக மகோத்சவம் (Global Spirituality Mahotsavam) வரும் 2026, மார்ச் 1 முதல் 3 வரை புதுச்சேரி மற்றும் ஆரோவில்லில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
மத்திய கலாச்சார அமைச்சகம், புதுச்சேரி அரசு மற்றும் ஆரோவில் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, புரட்சித் துறவி ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.
பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு (HLC)
ஸ்ரீ அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவை தேசிய அளவிலும் உலக அளவிலும் கொண்டாடுவதற்காக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் (High Level Committee) நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்த மகோத்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கௌரவப் பிரதமர் நரேந்திர மோடி இக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று, பாரதத்தை மீண்டும் ஒரு 'விஸ்வ குரு'வாக நிலைநிறுத்தும் தொலைநோக்குடன் இதனை முன்னெடுத்து வருகிறார்.
ஒரே மேடையில் இந்தியாவின் அரசியல் மற்றும் ஆன்மீக ஆளுமைகள்
இந்த மகோத்சவத்தில் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளில் உள்ள தலைவர்களும், உலகப்புகழ் பெற்ற ஆன்மீக குருக்களும் பங்கேற்கின்றனர்.
மத்திய அமைச்சர்கள்: திரு. ராஜ்நாத் சிங், திரு. அமித் ஷா, திருமதி. நிர்மலா சீதாராமன், திரு. எஸ். ஜெய்சங்கர் மற்றும் திரு. தர்மேந்திர பிரதான்.
ஆன்மீகத் தலைவர்கள்: ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், மாதா அமிர்தானந்தமயி தேவி, சத்குரு ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ எம் (மும்தாஜ் அலி), சுவாமி தேஜோமயானந்தா உள்ளிட்ட பல முக்கியப் பெரியோர்கள்.
நிர்வாகத் தலைமை: தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி, புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள்.
மேலும், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளரும் இக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, இந்த மகத்தான நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னின்று நடத்தி வருகிறார்.
புதிய மனிதகுலத்திற்கான ஐந்து கனவுகள்
"புதிய மனிதகுலத்திற்கான ஸ்ரீ அரவிந்தரின் ஐந்து கனவுகளை நனவாக்குதல்" என்பதே இந்த மகோத்சவத்தின் முதன்மையான நோக்கமாகும்.
ஸ்ரீ அரவிந்தர் கண்ட கனவுகளான:
இந்தியாவின் விடுதலை மற்றும் ஒற்றுமை, ஆசியாவின் மறுமலர்ச்சி, உலக நாடுகளின் கூட்டமைப்பு (World Union), இந்தியாவின் ஆன்மீகக் கொடை உலகிற்குச் செல்லுதல், மனிதப் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை
ஆகியவற்றை மையமாகக் கொண்டு உயர்மட்ட அமர்வுகள், தியானப் பயிற்சிகள் மற்றும் கலாச்சார உரையாடல்கள் நடைபெறவுள்ளன.
ஆரோவில்: மனித ஒருமைப்பாட்டின் வாழும் ஆய்வகம்
ஸ்ரீ அரவிந்தரின் கனவை நனவாக்க அன்னையினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நகரமான ஆரோவில், இந்த நிகழ்வின் மையப்புள்ளியாகத் திகழ்கிறது. ஜாதி, மத, இனப் பாகுபாடுகளைக் கடந்து மனிதகுலம் ஒன்றாக வாழும் ஒரு "வாழும் ஆய்வகமாக" (Living Laboratory) ஆரோவில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
பாரதத்தின் ஆன்மீக ஒளியை உலகம் முழுவதும் பரவச் செய்யும் இந்த வரலாற்று மைல்கல் நிகழ்வில் பங்கேற்க வருமாறு ஆரோவில் அறக்கட்டளையும் புதுச்சேரி அரசும் உலகெங்கிலும் உள்ள ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.























