பார்வையிட்டார்... ஆய்வு செய்தார்... அதிரடி காட்டினார்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி ரவுண்ட்ஸ்!
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்அவர்கள் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய மறுசீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம், மாநில நிதிக்குழு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.26.12 கோடி மதிப்பீட்டில் 227 தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாணாம்பட்டு ஆனங்கூர் சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி அமைக்கப்படும் தார்சாலையின் நீளம், அகலம் மற்றும் தார் சாலையின் தரம் குறித்து நகராட்சி பொறியாளர்களிடம் விரவாக கேட்டறியப்பட்டது.
அதனைதொடர்ந்து, காக்குப்பத்தில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கட்டுமானங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. விழுப்புரம் நகரப்பகுதிகளில் பாதாள சாக்கடை வழியாக வரக்கூடிய கழிவுநீரினை சுத்திகரிப்பு நிலயத்தில் சுத்திகரிக்கப்பட்டு ஓடை வழியாக நீர் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.
மேற்கண்ட புதிய சாலை பணிகள் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு மறுசீரமைப்பு பணிகள் போன்றவைகள் தரமான முறையில் செய்யப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட நகராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
அதனைதொடரந்து, விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் கீழ்பெரும்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. நடந்து முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, வரக்கூடிய அரசு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் அனைத்து பாட பிரிவுகளிலும் 100% தேர்ச்சி பெற வேண்டும் என தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர். வசந்தி, நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, விழுப்புரம் நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீபிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், விழுப்புரம் நகராட்சி உதவி பொறியாளர் கௌதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.























