பொங்கல் விடுமுறை; சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... இங்கலாம் traffic இருக்கும் கவனம்
பொங்கல் பண்டிகைக்கு தொடர்விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகமானோர் படையெடுத்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு தொடர்விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகமானோர் செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கி இருப்பவர்கள் பொங்கல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் வருகிற திங்கட்கிழமை போகி பண்டிகை, செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகை, புதன்கிழமை மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என தொடர் பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளது. மேலும் தொடந்து 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சொந்த வாகனத்தில் வெளியூர் செல்பவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் புறவழிச்சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருங்களத்தூர் அருகே ரயில்வே பால வேலைகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.
தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஏராளமான வாகனங்கள் செல்வதால் டிராபிக் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புறவழிச்சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மதுரவாயல் புறவழிச்சாலை மூலம் வெளியேறுவதையும் தவிர்க்கலாம் என்று காவல்துறை தெரிவி/////த்துள்ளது.
அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை நீதிமன்றம் பகுதி, மற்றும் விக்கிரவாண்டி புறவழிச்சாலை, விழுப்புரம் எலிஸ் சாலை உள்ளிட்ட பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது, இதனை விழுப்புரம் மாவட்ட காவல் துறை போலீசார் வாகன நெரிசலை கட்டுபடுத்தி வருகின்றனர்.
எந்த இடத்திலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் நிம்மதியாக செல்ல விழுப்புரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைகவசம் அணித்து வரவேண்டும் எனவும், மிதமான வேகத்தில் பயணிக்க வேண்டும், வாகனத்தை முந்தி செல்வதில் கவனம் இருத்தல் வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி டோல்கேட்டில் மாவட்ட எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விடுமுறை தொடங்கிய நிலையில் தென் மாவட்டங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலக வாகனகள் டோல் பிளாசாவை கடந்து சென்றன.
இந்நிலையில் சென்னையிலிருந்து அதிகமானோர் தென்மாவட்டங்களான, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு கார்களிலும் பேருந்துகளிலும் பயணித்து செல்வதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று அணிவகுத்து சென்றன. அதிகமான வாகன வருகையால் சுங்கச்சாவடியில் அனைத்து வழிகளும் திறக்கப்பட்ட போதும் அதிகமான வாகனங்கள் வருகையால் சுங்கச்சாவடியை கடப்பதில் சிரம்மம் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

