மேலும் அறிய

மக்களின் மகிழ்ச்சியே திமுக அரசின் நல்லாட்சிக்கு சான்று ; அதிரடியாக பேசிய துணை முதல்வர் உதயநிதி

திறமைக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய, நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய, நோக்கம் - துணை முதல்வர் உதயநிதி

விழுப்புரம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் சட்டக் கல்லூரி வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் விழாவில்,  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 688 ஊராட்சிகளுக்கு 825 எண்ணிக்கையிலான கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளையும், விழுப்புரம் மாவட்ட ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 257 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30.16 கோடி,நகர்ப்புர பகுதிகளைச் சேர்ந்த 38 சுய உதவிக் குழுவிற்கு ரூ.4.18 கோடி, என மொத்தம் 295 சுய உதவிக் குழுவிற்கு ரூ.34.34 கோடிக்கான  வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்ததாவது,

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 700 ஊராட்சிகளுக்கு 825 எண்ணிக்கையிலான கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்குகின்ற சிறப்பான நிகழ்ச்சி, 300 மகளிர் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகளுக்கு 35 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி என இந்த அரசு விழா மிகவும் எழுச்சியோடும், சிறப்போடும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் பயனாளிகளாக ஆயிரக்கணக்கில் வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்கள் வீட்டில் ஒருவனாக எனது மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம் 

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மாவட்டம். உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள மாவட்டம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும்,  நம்முடைய முதலமைச்சர் அவர்களின் மனதுக்கும் மிக மிக நெருக்கமான மாவட்டமாகும்.

நம்முடைய அமைச்சர் அண்ணன் பொன்முடி அவர்கள், விழுப்புரம் மாவட்டத்துக்கான திட்டங்களை, முதலமைச்சர் அவர்களிடம்  கூடுதலாக கேட்டுப் பெற்று உங்களிடம் கொண்டு  வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று தான் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கும் திட்டம். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 28 மாவட்டங்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி இருக்கின்றோம். விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் என்கிற வகையில் எவ்வளவோ மாவட்ட, மாநில, தேசிய,அளவிலான போட்டிகளைதொடங்கி வைத்திருக்கின்றேன்.

இதற்கெல்லாம் முன்னோடியாக, முதன் முதலாக ஒரு விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தேன் என்றால், அது இந்த விழுப்புரம் மாவட்டத்தில் தான். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக வருவேன், உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் கிட் கொடுப்பேன் என்று நினைத்து பார்த்தது கிடையாது. பொன்முடி அவர்களும், மாவட்டபொறுப்பாளர் கவுதமசிகாமணி ஏற்பாட்டில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பெயரிலான போட்டியை நடத்தி அதன் பரிசளிப்பு விழாவிற்கு என்னை அழைத்திருந்தார்கள்.

அந்த வகையில், அதே விழுப்புரத்தில் கலைஞர் பெயரில் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதை, உள்ளபடியே பெருமையாக கருதுகின்றேன். கிராமப்புறங்களில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு,  தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தின்  கீழ் விளையாட்டு உபகரணங்களை, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வழங்குகின்றோம். இந்த உபகரணங்களை பெறுவதற்காக, ஆண் வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகளும் அதிகளவில் வருகின்றார்கள். திராவிட மாடல் அரசு, விளையாட்டுத்துறைக்கு தருகின்ற முக்கியத்துவத்தின் காரணத்தால் தான், ஆண் பிள்ளைகளுக்கு, நிகராக பெண் பிள்ளைகளும் விளையாட்டுத்துறையை நோக்கி வருகின்றார்கள்.

அதற்கு ஓர் உதாரணம், சமீபத்தில் சென்ற மாதம் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடத்தி முடிக்கப்பட்ட முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி. வருடா, வருடம் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டி. இந்த வருடம் மட்டும் 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் அப்போட்டியில் கலந்து கொண்டார்கள். 5 பிரிவுகளாக இரண்டு மாதங்கள் நடத்தப்பட்டன.  அதில், தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியது.

ஆண்களை விட பெண்கள் அதிகமாக வந்துள்ளீர்கள்

இன்றைக்கு விழுப்புரத்திலும் அப்படித்தான், ஆண்களை விட பெண்கள் அதிகமாக வந்துள்ளீர்கள். ஏகப்பட்ட வீராங்கனைகள் வருகை தந்திருக்கிறீர்கள். இங்கே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மல்லர் கம்ப வீராங்கனை தங்கை சங்கீதா வந்திருக்கிறார். 9 வயதில் மல்லர் கம்பம் விளையாட ஆரம்பித்த இவர், 7 வருடங்களில் 34 பதக்கங்களை வென்றிருக்கிறார். சென்னையில்  நடைபெற்ற 2023 கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்தார்.அவருக்கு என்னுடைய பாராட்டுகள். அவருடைய வெற்றிப்பயணம் தொடர வேண்டும்.

அதே போல, தடகள வீரர் தம்பி பரத் இங்கே இருக்கிறார்.  World Athletics Under-20 Championship 2022-ல் தங்கமும், World Athletics Under-20 Championship 2021-ல் வெண்கல பதக்கமும் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்தார். Federation Junior National Athletic Championship, South Zone Junior Athletics Championship, Junior State Meet Athletic Championship, State Youth Athletic Championship, CBSE Cluster National Athletic Championship ஆகியப் போட்டிகளில், இதுவரை 11 தங்கம், 3 வெள்ளி, மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

பரத் அவர்கள் குவித்துள்ள இந்த சாதனைகள் விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும், ஒட்டுமொத்த நாட்டுக்குமே பெருமை அளிக்கக் கூடியவை. அவருக்கு நம்முடைய கழக அரசு என்றைக்கும் துணை நிற்கும். அதேபோல அவர்களுக்கு பயிற்சி அளித்த கோச், பெற்றோர்களும் இங்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு நம்முடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.  சங்கீதா அவர்கள் பேசும்போது, நான் ஒரு ஏழை வீட்டு பெண். துணை முதலமைச்சர் அருகில் என்னை உட்கார வைத்துள்ளார் என்று தெரிவித்தார். இரண்டு வெற்றி வீரர், வீராங்கனைக்கு நடுவில் உட்கார்ந்திருப்பது எனக்குதான் பெருமை.

திறமைக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது

திறமைக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய, நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய, நோக்கம்.  பரத் மற்றும் சங்கீதாவைப் போல விழுப்புரத்தில் இருந்து இன்னும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீரர் – வீராங்கனையர் நிச்சயம் உருவாக வேண்டும். அதற்காகத்தான் ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்குகின்றோம்.

ஊராட்சிகள் தோறும், விளையாட்டு உபகரணங்களை வழங்கும் திட்டத்துக்கு, எதற்காக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரைச் சூட்டியிருக்கிறோம் என்றால், ‘விடாமுயற்சி, கடின உழைப்பு, சோர்வின்மை, Team spirit’ என விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு தேவையான அத்தனை குணங்களுமே படைத்த ஒரே தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதனால்தான் இந்திய அரசியல் வரலாற்றிலேயே அசைக்கமுடியாத, வீழ்த்த முடியாத தலைவராக நம்முடைய கலைஞர் அவர்கள் திகழ்ந்தார்.

அந்த குணங்களை நீங்களும் பெற வேண்டும் என்று தான், இந்தத் திட்டத்திற்கு Kalaignar Sports Kit என்று பெயர் வைத்தோம். நம்முடைய முதலமைச்சர் அவர்கள், கடந்த3 வருடங்களில்மட்டும், 3 ஆயிரத்து 350 விளையாட்டுவீரர்களுக்கு,ரூபாய் 110 கோடியை உயரிய ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளார்கள். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி, ஏழை, எளிய, மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு, தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் பயனடைய விரும்பும் வீரர்கள், tnchampions.sdat.in எனும் இணையதளத்தில் பதிவு செய்தால் போதும். இந்த அறக்கட்டளை மூலமாக கடந்த 2 ஆண்டுகளில், 680 வீரர்களுக்கு 12 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளோம்.

சமீபத்தில் இந்த ஆண்டு பாரிஸில் நடந்த பாராஒலிம்பிக் போட்டிக்கு, தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்களை அனுப்பி வைத்தோம். அந்த ஆறு வீரர்களுக்கும், போட்டிக்குசெல்வதற்கு முன்பாகவே நம்முடைய முதலமைச்சர் அவர்கள்ஒவ்வொருவருக்கும் தலா 7 லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கினார்கள். அதில், 4 வீரர்கள்  பதக்கம் வென்று வந்தார்கள். அவர்களுக்கு மொத்தம் 5 கோடிரூபாய் அளவுக்கு நம் முதலமைச்சர் அவர்கள் உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாதா மாதம் ஏதாவது ஒரு மாநில,  தேசிய அல்லது சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கின்றோம்.ஆகஸ்ட் மாதம் Formula 4 Chennai Street Circuit கார் பந்தயத்தை நடத்தினோம். அதற்கு பிறகு, சென்ற மாதம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்தோம். இன்றைக்கு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் – 2024, செஸ் போட்டி தொடங்கி வைத்துள்ளோம். இந்த அளவுக்கு விளையாட்டுத்துறையை மாபெரும் இயக்கமாக துடிப்புடன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல மகளிர் மேம்பாட்டுக்கும், அனைத்து வகையிலும் நம் கழக அரசு துணை நின்று வருகிறது. அந்த வகையில், இன்றைக்கு 300 சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு வங்கிக் கடன் இணைப்பினை வழங்குகிறோம். இந்த விழுப்புரம் மாவட்டத்தில்  மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றீர்கள். மாநிலத்திலேயே விழுப்புரம் மாவட்டம் இரண்டாவது பெற்றுள்ளது இந்த மாவட்ட மகளிரின் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்.

ஒன்றிரண்டு குழுக்களைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். திருவெண்ணைநல்லூர் வட்டாரம், தென்னைவளம்ஊராட்சியில் ஆனந்தம் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடந்த 7 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றீர்கள். பால் உற்பத்தியில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வரும் உங்களுக்கு, இன்றைய தினம்ரூபாய் 20 லட்சம் வங்கிக் கடன் இணைப்பினை வழங்குவதில் அரசு பெருமையடைகின்றது.

அதே போல, காணை வட்டாரம், கல்யாணம்பூண்டிஊராட்சியில் காமராஜர்மகளிர் சுயஉதவிக் குழு கடந்த 10 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அக்குழுவின் சகோதரிகள் அழகுக்கலை நிலையத்தை நடத்தி  வருகின்றனர். இவர்களுடைய வாழ்வை அடுத்தகட்டத்துக்குச் எடுத்துச் சென்றிட, 18 லட்சம் ரூபாயை இங்கே வங்கிக் கடன் இணைப்பாக வழங்குகின்றோம். இந்தக் கடன் இணைப்புகளை, மகளிர் நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் உங்கள் வாழ்க்கையை, குடும்பத்தை பொருளாதாரத்தில் உயர்த்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பெண்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருந்த ஆணாதிக்கத்தை, பிற்போக்குத்தனத்தை தனது கைத்தடியால் அடித்து நொறுக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். ஒரு காலத்தில், பெண்கள் வீட்டுப்படிக்கட்டைக் கூட தாண்டக் கூடாது என்றார்கள். படிப்பதற்கான உரிமை இல்லாத நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு மகளிர் தொழில் முனைவோராக உயர்ந்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தொடக்கப் புள்ளி வைத்தவர் நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான், மகளிர் சுய உதவிக் குழுவினை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டிலே தொடங்கினார்கள்.

அந்த வழியில் நமது முதலமைச்சர் அவர்கள் மகளிர் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மகளிரின்பொருளாதார சுதந்திரத்தைஉறுதி செய்திட கழக அரசு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நமது முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற முதல்நாள் 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்கள். அதில் முதல் கையெழுத்து பெண்களுக்கான ‘விடியல் பயணம்’ கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தை  நம்முடைய முதலமைச்சர் அவர்கள்செயல்படுத்தினார்கள்.இந்த திட்டத்தில் ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள். 

மகளிர் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுக்க சிரமப்படக் கூடாது என்று, இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, திங்கள் முதல் வெள்ளி வரை 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு படிக்கின்ற 20 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள். அரசுப்பள்ளியில் படித்து கல்லூரியில் உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்காக ‘புதுமைப்பெண்’ எனும் திட்டதின் மூலம் மாதம் 1000 ரூபாய் கல்விஊக்கத்தொகையைநம்முடைய அரசு வழங்குகின்றது.

அதேபோல இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். கடந்த ஒரு வருடத்தில்ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதா, மாதம் 1000 ரூபாயை பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் 1 கோடியே 50 லட்சம் மகளிர்தான்.  சில பயனாளிகள் விடுபட்டுள்ளார்கள். விரைவில் கண்டிப்பாக தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும், மாதா, மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1,000 வழங்கப்படும் என்ற உறுதியினை நான் கொடுக்கின்றேன். 

கல்வி, சுகாதாரம், மருத்துவம், உட்கட்டமைப்பு, பெண்கள் முன்னேற்றம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது என்று ஒன்றிய அரசின் புள்ளியல் துறை தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் பணிக்குச் செல்லும் மகளிரில், 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தும்  ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடல் திட்டங்கள் தான். திராவிட மாடல் அரசை விவசாய வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பாராட்டுகிறார்கள், அலுவலகம் செல்லும் மகளிர் வாழ்த்துகின்றார்கள், கல்லூரி செல்லும் மாணவ – மாணவியர் – விளையாட்டு வீரர்கள் போற்றுகின்றார்கள்.

நம் அரசின் திட்டங்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அரசின் பயனாளிகளாக மட்டுமன்றி பங்கேற்பாளர்களாக இருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் உங்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே நம் முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சிக்கு சாட்சி. திராவிட மாடல் அரசிற்கான சான்றிதழ்.

நம் அரசின் சாதனைகளை நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த அரசின் பிராண்ட் அம்பாசடர்ஸ், என்றுமே மக்களாகிய நீங்கள் தான். உங்களுக்காக உழைக்க, உங்கள் குரலுக்கு ஓடோடி வந்திட, கழக அரசும், நாங்களும் என்றும் தயாராக இருக்கிறோம்.

இன்று, கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை பெறவருகை தந்துள்ள, அத்தனை ஊராட்சிகளுக்கும், என்னுடைய வாழ்த்துகள் .கலைஞர் விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு நன்றாக  விளையாடுங்கள். கிராம ஊராட்சிகளில் மட்டும் வழங்கப்பட்டு வரும், கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை, நம் முதலமைச்சர் அவர்களின் அனுமதியைப் பெற்று, நகரங்களிலும் வழங்குவதற்கு,, நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நேரத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். விழுப்புரம் மாவட்ட உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகள் போன்றவற்றில் ரூபாய் 79 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே வருகை தந்திருக்கும் ஒவ்வொரு மகளிரும் வாழ்வில் சாதிக்க வேண்டும். இன்றைக்கு 35 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கவுள்ளோம். இதனை நம் முதலமைச்சர் அவர்கள் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாகத்தான் பார்க்கின்றார்கள். இங்கே நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget