சூரியனின் பாதையில் தென்பட்ட வெள்ளிக் கிரகம்.. நாசா பகிர்ந்துள்ள பழைய படம்.. ஏன் இது முக்கியம்?
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அரிய வானியல் நிகழ்வு ஒன்றின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அமைப்பு பகிர்ந்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அரிய வானியல் நிகழ்வு ஒன்றின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அமைப்பு பகிர்ந்துள்ளது. நாசா அமைப்பின் சோலார் டைனாமிக்ஸ் ஆப்சர்வேட்டரி என்ற அமைப்பு வெள்ளிக் கிரகம் சூரியனின் நீள்வட்டப் பாதையில் இடம்பெற்றுள்ள அரிய புகைப்படத்தை நாசா அமைப்பு அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்திள் வெளியிட்டுள்ளது.
நாசா அமைப்பு இந்தப் பதிவில், `இது மிக அரிதான நிகழ்வு.. உலகம் இந்த நிகழ்வை மிகவும் விரும்பியது’ எனக் கூறியுள்ளது. இந்தப் படத்தில் சூரியனின் படம் இடம்பெற்றிருப்பதோடு, அதில் வெள்ளிக் கிரகம் சிறிய புள்ளியைப் போல தோன்றியுள்ளது. சூரியனின் பாதையில் கிரகங்கள் இடம்பெறுவது வானியல் ஆய்வாளர்களுக்கு மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று.
நாசா அமைப்பு, `சூரியப் பாதையில் கிரகங்கள் இடம்பெறுவது கிரகங்களின் வளிமண்டல அமைப்பு, சுற்றுப்பாதை முதலானவற்றை ஆய்வு செய்ய உதவுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது.
View this post on Instagram
வெள்ளிக்கிரகம் இவ்வாறு சூரியனின் பாதையில் இடம்பெற்றதைப் போல மீண்டும் ஒரு நிகழ்வு தோன்ற மேலும் சுமார் 100 ஆண்டுகள் ஆகலாம். நாசா அமைப்பு, `வெள்ளிக் கிரகத்தின் சூரியப் பாதையில் பயணிப்பது ஜோடிகளாக நூறாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக இதே நிகழ்வு கடந்த 2004, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது. இது வரும் 2117ஆம் ஆண்டுவரை நடைபெறாது’ எனக் கூறியுள்ளது. மேலும், `2012ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு சுமார் 7 மணி நேரங்கள் நடைபெற்றதுடன், உலகம் முழுவதும் 7 கண்டங்களில் வாழும் ஆய்வாளர்களும் இதனைக் கண்டனர்’ எனவும் நாசா தெரிவித்துள்ளது.
நாசா அமைப்பைப் பொருத்த வரையில், விண்வெளியில் ஒரு பொருளை மற்றொரு பொருள் ஒரே பாதையிள் தாண்டிச் செல்வது இந்தப் போக்குவரத்தைக் குறிக்கும். இந்தப் போக்குவரத்துகளைப் பார்வையிடுவதன் மூலமாக ஒரு கிரகத்தின் அமைப்பைக் கண்டறிய முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.