மேலும் அறிய

“ரூ.20 ஆயிரம் கொடுத்தால் வேலை சீக்கிரம் முடியும்” - கையும் களவுமாக சிக்கிய திருச்சி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்

உதவி செயற்பொறியாளர் அலுவலகம், இயக்கலும் காத்தலும், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிரமான கழகம், கிராப்பட்டி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது..

லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி வயது (46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார். இந்நிலையில்  திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறார்.

அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போட வேண்டும் நிலை ஏற்பட்டது. ஆகையால் கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழகம் இயக்கலும், காத்தலும், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகினார். அங்கிருந்த வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் கூறியதன் பேரில், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி உள்ளார்.

அதன் பிறகு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் இடத்தினை பார்வையிட்டு எஸ்டிமேட் தயார் செய்து கொடுத்துவிட்டு 35 ஆயிரம் ரூபாய் ஆன்லைனில் கட்டணம் செலுத்துமாறு அந்தோணியிடம் கூறியுள்ளார்.

“ரூ.20 ஆயிரம் கொடுத்தால் வேலை சீக்கிரம் முடியும்” - கையும் களவுமாக சிக்கிய திருச்சி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்

லஞ்சம் பெற்றால் கடுமையான நடவடிக்கை - லஞ்ச ஒழிப்பு துறை எச்சரிக்கை..

அதன் பேரில் அந்தோணி உயிர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு 35 ஆயிரம் கட்டணம் ஆன்லைன் மூலம் கடந்த (15.4.2024) அன்று செலுத்திவிட்டு அதன் ரசீதினை, எடுத்துக் கொண்டு வணிக உதவியாளர் அன்பழகன் இடம் கொடுத்துள்ளார். அதற்கு அன்பழகன் ஒரு மாதம் கழித்து தன்னை வந்து பார்க்க வேண்டுமாறு கூறியுள்ளார்.

அதன் பேரில் அந்தோணி நேற்று முந்தினம் (27.05.2024) காலை சுமார் 11:30 மணி அளவில் மேற்படி அன்பழகனை கிராபட்டியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மின் கம்பம் மாற்றம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் உங்க வேலை முடிக்க வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் கொடுத்தீர்கள் என்றால் சீக்கிரமே முடித்துக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்தோணி தன்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்று கூறியதன் பேரில் அன்பழகன் 5 ஆயிரம் குறைத்துக் கொண்டு, 15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உங்களது வேலையை செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை வந்து காவல்துணை கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் நேற்று (28.5.2024) காலை 11:00 மணியளவில் அந்தோணியிடமிருந்து அன்பழகன் லஞ்சமாக 15,000 பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். உடனடியாக அவரை கைது செய்து லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கூறியது.. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டபடி குற்றம் ஆகும். குறிப்பாக அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அனைத்து மக்களுக்காக செயல்பட்டு வருகிறது. அரசு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி அதிகாரிகள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். லஞ்சம் பெற்றால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
Pariksha Pe Charcha 2025: வெயிட்டிங்கில் விமானம் - மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, லிஸ்டில் ஸ்டார்கள்
Pariksha Pe Charcha 2025: வெயிட்டிங்கில் விமானம் - மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, லிஸ்டில் ஸ்டார்கள்
Donald Trump: பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
Pariksha Pe Charcha 2025: வெயிட்டிங்கில் விமானம் - மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, லிஸ்டில் ஸ்டார்கள்
Pariksha Pe Charcha 2025: வெயிட்டிங்கில் விமானம் - மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, லிஸ்டில் ஸ்டார்கள்
Donald Trump: பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
Gold Rate: ஆண்டவா.!! இது எங்க போய் நிக்குமோ.? ரூ.64,000-ஐ நெருங்கிய தங்கத்தின் விலை...
ஆண்டவா.!! இது எங்க போய் நிக்குமோ.? ரூ.64,000-ஐ நெருங்கிய தங்கத்தின் விலை...
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Vidaamuyarchi Boxoffice: அஜித்திற்கு கை கொடுத்ததா வீக் எண்ட்? விடாமுயற்சியின் கம்பேக்?  4 நாட்களில்  மொத்த வசூல் என்ன?
Vidaamuyarchi Boxoffice: அஜித்திற்கு கை கொடுத்ததா வீக் எண்ட்? விடாமுயற்சியின் கம்பேக்? 4 நாட்களில் மொத்த வசூல் என்ன?
Valentines Day:
Valentines Day: "சேரா காதல்தான்.. ஆனால் தீராக்காதல்" காலத்திற்கும் அழியா ஒரு தலைக் காதல் படங்கள்!
Embed widget