மத பிரச்சனை தூண்டும் விதமாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட நபர் அதிரடியாக கைது
திருச்சி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக வீடியோக்களை பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - எஸ்.பி. வருண்குமார் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு, கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் பொது அமைதிக்கு சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறான வீடியோகளை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் பொதுமகளை அச்சுறுத்தும் வகையில், பயங்கரமான ஆயுதங்களை வைத்து வீடியோ பதிவு செய்ய கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தவறான நோக்கத்தோடு பதிவுகளை பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்களை பதிவிடும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என திருச்சி எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி மாவட்டம்,. சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜசேகர் என்பவர், இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கபட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 02.07.2024-ஆம் தேதி 12.00 மணிக்கு சமூகவலைதளமான முகநூல் புத்தகத்தில் தவறான பதிவை பதிவிட்டுள்ளார். அதில் இரு வேறு மதத்தைச் சேர்ந்த ஆணும் ,பெண்ணும் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை பதிவிட்டு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பெண்களை பற்றி தவறுதலாக டைப் செய்து பதிவிட்டுள்ளார்.
இது போன்று குறிப்பட்ட மதத்தைச் சேர்ந்த பெண்களை அவமதிக்கும் வகையில் அவரது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வந்ததால் சைபர் கிரைம் காவலர் ராஜசேகர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் படி, தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடப்பட்டு வந்தனர்.
சமூக வலைதளங்களில் மத பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்ட நபர் கைது.
மேற்படி பதிவினை பதிவிட்ட அசோக்குமார், பெருமாள் கோவில் தெரு, அப்பன் திருப்பதி அஞ்சல், மதுரை மாவட்டம் என்பவரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இது போன்று பெண்களை அவமதிக்கும் வகையிலும், இரு வேறு மதத்தினரிடையே பிரச்சனை ஏற்படும் வகையிலும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வரும் நபர்களை கண்காணிக்க திருச்சி மாவட்ட காவலர்களால் இணைய மற்றும் சமூக வலைதள குழு இயங்கி வருகிறது.
மேலும், சமூக வலையதளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும், கலவரத்தை தூண்டும் விதமாகவும், மத பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக தவறான நோக்கத்தோடு வீடியோகள், பதிவுகளை பதிவு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.