மேலும் அறிய

ஆரணியில் வெயிலின் வெப்பத்தை தாங்காமல் 350 கோழிகள் உயிரிழப்பு

ஆரணி அருகே வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுமார் 70 ஆயிரம் மதிப்பிலான 350 கோழிகள் இறந்தவிட்டன. பண்ணையின் உரிமையாளர் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்து இறந்த கோழிகளை அடக்கம் செய்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை என்பது 43 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37°-39° செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் வெயிலின் வெப்பத்தை தாங்காமல் 350 கோழிகள் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு 

மேலும் மே 2 ஆம் தேதி மற்றும் 3 ஆம் தேதி இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் வயது  (35) இவர் புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த 10ஆண்டுக்கு மேலாக கோழிபண்ணை வைத்து கோழிகளை வளர்த்து வருகிறார்.  தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் நேற்று காணப்பட்டது.

ஆரணியில் வெயிலின் வெப்பத்தை தாங்காமல் 350 கோழிகள் உயிரிழப்பு

வெயிலின் தாக்கத்தால் கோழிகள் உயிரிழப்பு 

வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகப்படியாக காணப்படுகின்றது. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை வீசப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகப்படியாக  இருந்த நிலையில் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீலான 350 கோழிகள் திடீரென இறந்து விட்டன. இதனை அறிந்த கோழிப்பண்ணை உரிமையாளர் தினேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பண்ணை அருகில் தனது சொந்த இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி கோழிகளை புதைத்தார். தொடர்ந்து வெயில் தாக்கம் உள்ளதால் மேலும் கோழிகள் இறக்க நேரிடுவதாகவும் இதனால் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கால்நடை வளர்போர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
TN Fact Check : வக்பு வாரியம், சொத்தை அபகரிக்கலாம் என பரவும் வதந்தி: தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன?
வக்பு வாரியம், சொத்தை அபகரிக்கலாம் என பரவும் வதந்தி: தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
TN Fact Check : வக்பு வாரியம், சொத்தை அபகரிக்கலாம் என பரவும் வதந்தி: தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன?
வக்பு வாரியம், சொத்தை அபகரிக்கலாம் என பரவும் வதந்தி: தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன?
Rasipalan: சிம்மத்துக்கு வெற்றி.. கன்னிக்கு கவலை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: சிம்மத்துக்கு வெற்றி.. கன்னிக்கு கவலை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Ajithkumar: ரியல் மாஸ்! கார் ரேஸ் மைதானத்தில் மிரட்டும் அஜித் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Ajithkumar: ரியல் மாஸ்! கார் ரேஸ் மைதானத்தில் மிரட்டும் அஜித் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Mamata - Priyanka: வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி:  மம்தா பரப்புரை? எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
Mamata - Priyanka: வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி: மம்தா பரப்புரை? எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Embed widget