சேதமடைந்த விஏஓ அலுவலகம்: பயத்தில் பணிபுரியும் அலுவலர்கள்!
கனமழை காரணமாக வழுவூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ள நிலையில் உயிர்சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் அக்டோபர் இருபத்தி எட்டாம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் கடந்த 12 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில் வயல் வெளிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பயிர்கள் அழுக தொடங்கியுள்ளது இதேபோன்று பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதம் அடைந்திருப்பதால் காரைகள் பெயர்ந்து தற்போது விழுந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரி செய்ய வருவாய் துறை அலுவலர்கள் தொடர்ந்து 3 நாட்கள் தங்கள் அலுவலகங்களிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது நிலையில் கழிவறை குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் சேதமடைந்த கட்டிடத்தில் உயிர் பயத்துடன் அரசு ஊழியர்கள் வேலை பார்த்து வருவதாக அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
ஜெயிச்சுட்டோம் மாறா மொமண்ட்.! தனிமை.. தனிமையே.! - வைரலாகும் ஜிம்மி நிஷமின் போட்டோ!!
ரஜினிகாந்த் படமும்.. நரக வாழ்க்கையும்" - கடந்த காலம் குறித்து ஓபனாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்!
மேலும் பொதுமக்களும் பல்வேறு தேவைகளுக்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் இந்த வேளையில் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து யாருக்கேனும் ஆபத்து ஏற்படும் முன்னர் உடனடியாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை சரிசெய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.