மேலும் அறிய

தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!

 ரமலான் நோன்பின் உணர்வை  கொண்டாடுவதற்கு அனைத்து சமுதாய மக்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம் என்றார் தஞசை மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை நடத்திய மாபெரும் இஃப்தார் கொண்டாட்டம் நடந்தது. இந்த இப்தார் நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் நிகழ்வில் 2000 - க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது, சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறை மற்றும் பொறுப்புறுதியின் ஒரு வெளிப்பாடாக தள்ளுபடி செய்த கட்டணங்களில் உடல்நல பராமரிப்பு சேவைகளைப் பெற உதவுவதற்காக கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு உடல்நல பராமரிப்பு அட்டைகளை மருத்துவமனை வழங்கியது. 

சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் ஒரு சிறப்பான இஃப்தார் விருந்தை மீனாட்சி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது.  இதில் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 2000 - க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.  இஸ்லாமியர்களுக்கு புனித மாதமான ரமலான் நோன்பின்போது பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.  

இஃப்தார் விருந்தின்போது, பாரம்பரியமான பரிமாறப்படும் உணவுகள் இந்நிகழ்வில் இடம்பெற்றது.  ரமலான் நோன்பு காலத்தின்போது ஆரோக்கியமாக உணவு உண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஊட்டச்சத்துள்ள உணவுகள் பற்றிய ஆலோசனைக் குறிப்புகளையும் மீனாட்சி மருத்துவமனை இந்நிகழ்வில் வழங்கியது.  

இஃப்தார் விருந்து நிகழ்வில் தலைமை விருந்தினராக மகாராஜா சில்க்ஸ்  & மஹால் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. முகமது ரஃபி கலந்துகொண்டு சிறப்பித்தார்.  இந்திய இவான்ஜெலிக்கல் லுத்தரன் ஆலயத்தின் பாஸ்டர் ஜேக்கப் ஜெயராஜ் உட்பட, கிறிஸ்தவ மற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டது சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.  

இதில் மீனாட்சி மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம் வரவேற்புரையாற்றினார். சிறப்புரை வழங்கிய ஓய்வு துணை காவல் கண்காளிப்பாளர் மாணிக்கவாசகம் ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்த செய்தியை வலியுறுத்தினார்.  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான அல்மாஸ் அலி மற்றும் மீரா பஸ் உரிமையாளர் சர்ஃபுதீன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மீனாட்சி மருத்துவமனையின் செயல்பாட்டுத் துறை மற்றும் மார்க்கெட்டிங் பொது மேலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றி இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு சலுகையை வழங்கும் பிரிவிலேஜ் அட்டைகளை வினியோகித்தார்.  அகத் தணிக்கை துறையைச் சேர்ந்த  ஹாஜா நஜிமுதீன், மருத்துவமனையின் அழைப்பை ஏற்று பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். 

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் கலந்து கொண்டு அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.  “இதுபோன்ற நிகழ்வுகளே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கனிவான கருணையின் சக்தியை நமக்கெல்லாம் வலுவாக நினைவூட்டுகின்றன.  ரமலான் நோன்பின் உணர்வை  கொண்டாடுவதற்கு அனைத்து சமுதாய மக்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்.  உடல்நல சிகிச்சை என்பதையும் கடந்து, பிணைப்புகளை மேலும் வலுவாக்குவதிலும் கருணையின் உண்மையான மதிப்பீடுகளை செயல்பாட்டில் பிரதிபலிக்கவும் ஒருவர் மற்றொருவருக்கு ஆதரவாக இருப்பதன் முக்கியத்துவத்தை  உணர்த்துவதிலும் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.

ஒத்திசைவும் நெருக்கமான நல்லுறவும் கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் இம்மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும், அக்கறையையும் வலியுறுத்தும் விதத்தில் 2000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆண்டுதோறும் நடத்தி வரும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
200 தொகுதிகளையும் தாண்டி வெல்வோம்... தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
200 தொகுதிகளையும் தாண்டி வெல்வோம்... தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: சென்னையில் இலைக்கு மாறும் 4 தொகுதிகள் - கோவையில் சூரியன் உதிக்கும் தொகுதிகள் - TVK-வால் ஷாக்
TN Election 2026: சென்னையில் இலைக்கு மாறும் 4 தொகுதிகள் - கோவையில் சூரியன் உதிக்கும் தொகுதிகள் - TVK-வால் ஷாக்
US IRAN War: பெரிய பிரச்னை ஆகிடும்..! ஈரானுக்கு ஆதரவாக வந்த சீனாவிற்கு ட்ரம்ப் மிரட்டல், 15 மணி நேரம்..
US IRAN War: பெரிய பிரச்னை ஆகிடும்..! ஈரானுக்கு ஆதரவாக வந்த சீனாவிற்கு ட்ரம்ப் மிரட்டல், 15 மணி நேரம்..
Kanimozhi: ”ஃப்ரிட்ஜும் வராது, அதிமுகவும் வராது.. வரப்போவது எல்லாமே” பரப்புரையில் கனிமொழி விமர்சனம்
Kanimozhi: ”ஃப்ரிட்ஜும் வராது, அதிமுகவும் வராது.. வரப்போவது எல்லாமே” பரப்புரையில் கனிமொழி விமர்சனம்
MK Stalin Vs EPS: “அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
“அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
தமிழ்நாடு உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமனம் ஏன்.? பரபரப்பு தகவல்கள்...
தமிழ்நாடு உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமனம் ஏன்.? பரபரப்பு தகவல்கள்...
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
Embed widget