Keerthy Suresh | நடிப்பு மட்டுமல்ல.. இசையும்தான்.. வயலின் வாசிக்கும் கீர்த்தி ! உறுதிப்படுத்திய இசையமைப்பாளர்!
கீர்த்தி சுரேஷ் வயலின் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கங்களில் வயலின் வாசித்து வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கீத கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குநர் பரசுராம் இயக்கியுள்ளார். படத்தை மகேஷ் பாபுவிற்கு சொந்தமான GMB புரொடக்சன்ஸுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கவுள்ளார். படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் நாயகன் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
April 1st 2022!! 😊#HappyDiwali @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @MythriOfficial @GMBents @14ReelsPlus #SarkaruVaariPaata pic.twitter.com/fw83zwDC7T
— Mahesh Babu (@urstrulyMahesh) November 3, 2021
இந்த நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக சில செய்திகள் விழவே, அது குறித்த தொடர் கேள்வியை இசையமைப்பாளர் எஸ்.தமனிடம் தொடர்ந்து நெட்டிசன்கள் முன்வைக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அதனை மறுக்காத எஸ்.தமன் “அவர் நிச்சயமாக வயலின் வாசிக்கிறார் “ என சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
She will play the violin for sure 🧨❤️ https://t.co/eYVki3ULEh
— thaman S (@MusicThaman) November 9, 2021
கீர்த்தி சுரேஷ் இசையின் மீது ஆர்வம் கொண்டவர். அதனை வெளிப்படுத்தும் விதமாக அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கங்களில் வயலின் வாசிப்பது, கிட்டார் வாசிப்பது, பாடல்கள் பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
இந்நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்திலும் அவர் வயலின் வாசிக்கவுள்ளார் என்ற செய்தி அவர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சர்காரு வாரி பாட்டா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. படம் முன்னதாக ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு, தற்போது மார்ச் மாதத்திற்கு வெளியீட்டு தேதி மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.