மேலும் அறிய

Chennai Chief Justice Transferred: சந்தேகங்களை கிளப்பும் சென்னை தலைமை நீதிபதியின் இடமாற்றம்.. அடுக்கப்படும் கேள்விகள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி  மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய இந்திய உச்சநீதிமன்ற கொலிஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு (Collegeium-கொலீஜியம்) பரிந்துரைத்தது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி  மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வரும்  முனீஷ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்றத்திகும் மாற்றம் செய்தும் உச்சநீதிமன்ற கொலிஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு (Collegeium-கொலீஜியம்) பரிந்துரைத்தது. 

தேர்வுக் குழவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய சாசனப் பிரிவுகளில் வழங்கப்பட்ட  (சரத்து - 222   )அதிகாரத்தின்படி, பணியிடை மாற்றங்கள் தொடர்பான உத்தரவை இந்திய ஜனாதிபதி பிறப்பிப்பார். ஆனால், இதுவரை  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பணியிடை மாற்றம் தொடர்பான உத்தரவை அவர் பிறப்பிக்கவில்லை.     

Chennai Chief Justice Transferred: சந்தேகங்களை கிளப்பும் சென்னை தலைமை நீதிபதியின் இடமாற்றம்.. அடுக்கப்படும் கேள்விகள்!   

நீதிபதிகளின் அதிரடி இடமாற்றம் கொலீஜியம் முறை மீதான அதிருப்தி மனநிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான இந்திரரா செய்சிங் தனது ட்விட்டர் பதவில், "கவலைதரும் செயல். பணியிடை மாற்றம் என்பது ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனையா?  ஏன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்? இதற்கான காரணங்கள் பொது வெளியில் வைக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

முந்தைய சம்பவம்: இதற்கு முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் 2019 ஆகஸ்ட் மாதம் முடிவு செய்தது. இதை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமணி விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டாத்ததால் அதிருப்தி அடைந்த தஹில் ரமணி தன் பதவியை விட்டு விலகினார்.  

Chennai Chief Justice Transferred: சந்தேகங்களை கிளப்பும் சென்னை தலைமை நீதிபதியின் இடமாற்றம்.. அடுக்கப்படும் கேள்விகள்!
தஹில் ரமணி

நீதிபதி சஞ்சீப் பானர்ஜி:   65 நீதிபதிகளைக் கொண்டு நாட்டின் நான்காவது பெரிய நீதிமன்றமாக சென்னை உயர்நீதிமன்றம் விளங்குகிறது. இதில், பெண் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாட்டிலேயே அதிகமான பெண் நீதிபதிகள் பணிபுரிகின்றனர். இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது. ஆனால்,  மேகாலயா நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட  நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை நான்காக உள்ளது.   

இந்தாண்டு ஜனவரி நான்காம் தேதி (04.01.2021) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.  கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது, இவரின் செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கொரோனா பெருந்தொற்று  தடுப்பு நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் "தானாக முன்வந்து" (suo motu) விசாரணையை தொடங்கியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி அணுகல், மருத்துவ உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு விசயங்களில் தமிழக அரசுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.     

மேலும், கடந்த 26 ஏப்ரல் அன்று இவரது தலைமையிலான அமர்வு, “தேர்தல் காலத்தில் ஆணையம் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாதது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது, ‘தேர்தல் சமயத்திலும் பரப்புரை நேரத்திலும் யாருமே கொரோனா விதிகளைப் பின்பற்றவில்லை. கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு இந்தியத்  தேர்தல் ஆணையமே முழுப்பொறுபேற்க வேண்டும் என்று கூறிய அவர், அதன் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை" என்று தெரிவித்தது.  

Chennai Chief Justice Transferred: சந்தேகங்களை கிளப்பும் சென்னை தலைமை நீதிபதியின் இடமாற்றம்.. அடுக்கப்படும் கேள்விகள்!

மற்றொரு வழக்கில், இந்திய அறிவியல் கழகம் அனடத்தும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்டம்  (KVPY:Kishore Vaigyanik Protsahan Yojana)உளச்சார்பு தேர்வை பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று கூறி இந்தாண்டிர்கான தேர்வை ஒத்திவைக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். இந்த திட்டம் மாணவர்கள்களுக்கு உதவித்தொகை மற்றும் இடைக்கால மானியங்களை முனைவர்(பிஎச்டி) பட்டப்படிப்பிற்கு முந்தைய நிலை வரை வழங்குகிறது. 

மேலும், நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஏ.கே ராஜன் குழுவை ரத்து செய்ய வேண்டும், இந்து ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் போன்ற மனுக்களை முற்றிலும் தள்ளுபடி செய்தார்.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget