Watch Video | புர்ஜ் கட்டடத்தின் உச்சிக்கு சரசரவென ஏறிய வில் ஸ்மித்.! உச்சியில் அமர்ந்து மாஸான க்ளிக்!
வில் ஸ்மித் கார்டியோ பயிற்சியை முடிக்க, கோபுரத்தின் 2,909 படிக்கட்டுகளைப் பயன்படுத்தி துபாயின் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் உச்சியில் ஏறி முடித்தார்.
ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித், தனது எடை குறைப்பு பயணத்தை ஆவணப்படுத்தும் புதிய யூடியூப் தொடரான 'பெஸ்ட் ஷேப் ஆஃப் மை லைஃப்' இன் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் ஏறினார். இந்த கார்டியோ வொர்க்அவுட்டை முடிக்க, கோபுரத்தின் 2,909 படிக்கட்டுகளைப் பயன்படுத்திய அவர், உலகின் புகழ்பெற்ற கட்டிடத்தின் உச்சியில் ஏறி முடித்தார். புர்ஜ் கலீஃபாவின் 160 மாடிகளில் ஏறி முடிக்க வெறும் 51 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார். அதன் விடியோ காட்சிகளில், வில் ஸ்மித் வியர்த்து சோர்ந்து போனார். அவர் இறுதியாக 160 வது மாடிக்கு வந்தபோது, அவரால் இன்னும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார்.
'ஐ ஆம் லெஜெண்ட்' என்று எழுதப்பட்ட தலைக்கவசத்தை அணிந்தவாறு நடிகர் வில் ஸ்மித் ஒரு ஏணியில் ஏறி நின்றார். 'பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் ஒரு மனிதன் அதிகபட்சம் இருக்க முடிந்த தனிப்பட்ட உயரமான புள்ளியில் வில் ஸ்மித் நின்றுகொண்டிருந்தார். இதற்கிடையில், யூடியூப் ஆவணப்படங்கள், கிராமி விருது பெற்ற நடிகர் வில் ஸ்மித் செய்யும் உடற்பயிற்சி மற்றும் உடல்நலப் பயணங்களை விடியோ தொடர்ந்து காட்டுகிறது. 'பெஸ்ட் ஷேப் ஆஃப் மை லைஃப்' விடியோவின் முதல் இரண்டு எபிசோடுகள் நவம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது. மீதமுள்ள நான்கு எபிசோடுகள் வில் ஸ்மித்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் தினமும் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆவணப்படங்களின் டிரெய்லரில், நடிகர் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பிய ஒரு காலகட்டம் இருந்ததையும் வெளிப்படுத்தியிருந்தார்.
அவர் தற்கொலை எண்ணங்களுக்கு எதிரான தனது போரைப் பற்றியும் குறிப்பிட்ட கால கட்டத்தை அவர் எவ்வாறு சமாளித்து மீண்டு வந்தார் என்பதைப் பற்றியும் மனம் திறந்து பேசினார். "என் வாழ்க்கையையும், என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியாத பல விஷயங்களையும் இங்கு நான் சொல்கிறேன், என் வாழ்க்கையில் நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்த ஒரே ஒரு முறை இருக்கிறது..." என்று டிரெய்லரில் வில் ஸ்மித் கூறினார். பின் அது எதனால், எந்த காரணம் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. இந்த வீடியோ முழுக்க யூட்யூப் ஒரிஜினல்ஸால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் தயாரான நிலையில் எல்லா தளங்களிலும் தொழில்நுட்ப பணியாளர்களையும், மருத்துவ பணியாளர்களையும், தேர்ந்த உடற்பயிற்சியாளர்களையும், நிபுணத்துவமிக்க குழுவை கொண்டு இதை செய்து முடித்திருக்கிறாகள். ஒரு சிறந்த ஆவணப்படமாக உருவாகி இருக்கும் இந்த வீடியோவில் பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை வில் ஸ்மித் பகிர்ந்துகொள்கிறார்.