வேன் மீது இருசக்கர வாகனம் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் எதிரே வந்த வேன் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் மணக்குளம் பகுதியில் மயிலாடுதுறை -கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு உயர்ரக இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் 22 வயதான அபினாஷ். இவர் தனது 23 வயது நண்பரான கிருபாகரன் என்பவருடன் உயர்ரக இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டெம்போ டிராவலர் வேனும் இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் டிரைவர் தவிர்த்து வேறு யாரும் இல்லாததால், வேனை ஓட்டி வந்த வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்கதையாகிவரும் விசாரணைக் கைதிகளின் மரணங்கள்! என்ன நடந்தது?
ஆனால், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அபினாஷ் வேன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயத்துடன் கீழே கிடந்த கிருபாகரனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருபாகரனும் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அபினாஷ் மற்றும் கிருபாகரன் ஆகிய இருவரது உடலையும் குத்தாலம் காவல்துறையினர் கைப்பற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து குத்தாலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரவக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் காவல்துறைக்கு என தனியாக மண்டகப்படி.. நூதன திருவிழா.
மேலும், வேனில் பயணிகள் இல்லாத நிலையில் வேன் ஓட்டுநர் அதிவேகமாக வேனை இயக்கி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது இளைஞர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கினார்களா என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் அரசு கூறும் சாலை விதிகளை மதித்து தலைகவசம் அணிந்து வானத்தை ஓட்டியிருந்தால் இதுபோன்ற இறப்பை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தனர்.