மேலும் அறிய

சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா

இது அவர்களின் வலுவான குழுப்பணி, சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டியுள்ளது.

தஞ்சாவூர்: கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளுக்கான சேவைகளைவழங்கும் நிறுவனங்களது அகிலஇந்தியசங்கத்தின் (IESA - Indian Exhibitions, Conferences & Events Services Association) தமிழ்நாடு பிரிவு, இப்பிராந்தியத்தின் நிகழ்வுகள் தொழில்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ள 'கான்க்ளேவ்’26'  நிகழ்வின் முன்னோட்டவிழாவை சென்னையில் நடத்தியது.

இந்த அறிமுக நிகழ்வில்102 நிறுவனங்கள் பெருமளவில் பங்கேற்றன. இதில் பெரும்பான்மையானவை, முதல்முறையாக இந்நிகழ்வில் பங்கேற்கும் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழில்துறையின் மீது வளர்ந்து வரும் நம்பிக்கை, விரிவடையும் ஈடுபாடு மற்றும் இந்தத் துறையின் வேகமான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இந்நிகழ்வில் EEMA-வின் துணைத் தலைவர் வினோத் கோபால் உள்ளிட்ட தொழில்துறையின் முன்னணி பிரமுகர்களும், பிற சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தும் இத்தொழில் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கிடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியிலான வளர்ச்சி ஆகியவற்றை தங்களது உரைகளில் வலியுறுத்தினர்.

சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா

இந்த முன்னெடுப்பை இச்சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வெற்றிகரமான நிகழ்வாக இதை நடத்தியிருக்கின்றனர் பி. புனிதன் – தலைவர், IESA தமிழ்நாடு, மேத்யூ – துணைத் தலைவர், சீனிவாசன் – செயலாளர், அரவிந்த் – இணைச் செயலாளர், கௌதம் – பொருளாளர், சந்தோஷ் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் கான்க்ளேவ் மையக் குழு, இந்த அறிமுக விழாவை வெற்றிகரமாக நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.

இது அவர்களின் வலுவான குழுப்பணி, சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டியுள்ளது. IESA தமிழ்நாடு பிரிவின் தலைவர் பி. புனிதன் தனது உரையில், தொழில்துறை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதிலும், நிறுவனங்களின் பங்கேற்பை அதிகரிப்பதிலும், தேசிய அளவிலான நிகழ்வுகள் துறையில் தமிழ்நாட்டை ஒரு ஆற்றல்மிக்க சக்தியாக நிலைநிறுத்துவதிலும் சங்கம் உறுதியாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

'கான்க்ளேவ்’26' நிகழ்வானது, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வரும் 2026 ஜூன் 26 அன்று நடைபெற உள்ளது. இந்த முன்னோட்ட நிகழ்வில் காணப்பட்ட சிறப்பான பங்கேற்பும், அமோக வரவேற்பும் ஒரு தெளிவான செய்தியை உணர்த்துகின்றன. IESA தமிழ்நாடு பிரிவு வெறும் நிகழ்வுகளை மட்டும் ஏற்பாடு செய்து நடத்துவதோடு தனது செயற்பாட்டை சுருக்கிக் கொள்வதில்லை. மாறாக ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் கூட்டு சந்தையாக்கல் முயற்சி மற்றும் உத்திசார்ந்த பிராண்டிங் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) மற்றும் சிறு-குறு நிறுவனங்களின் (SMEs) வளர்ச்சிக்காக ஒரு வலுவான, ஒருங்கிணைந்த தொழில்துறை தளத்தை உருவாக்கி வருகிறது என்பதே இந்தநிகழ்வு உணர்த்தும் செய்தியாகும்.

தலைப்பு செய்திகள்

அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget