அரவக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் காவல்துறைக்கு என தனியாக மண்டகப்படி.. நூதன திருவிழா.
54-ஆம் ஆண்டு காவல்துறையின் சார்பில் திருட்டு சம்பவத்தை குறைக்க காவல் அதிகாரி எடுத்த நூதன முயற்சி தற்போது வரை தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கரகம் பாலித்தல், சக்தி அழைத்தல் பொதுமக்கள் சார்பில் மாரியம்மனுக்கு பூத்தட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் திருவிழாக்காலங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக் காவடியுடன் புனித தீர்த்தம் கொண்டு வந்தனர். அன்று மாலை அக்கினிச்சட்டி எடுத்தல், ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பொங்கள் வைத்த பின்னர் மாவிளக்கு எடுத்து வந்தனர். இந்நிலையில் 54-ஆம் ஆண்டு அரவக்குறிச்சி காவல் துறையினர் சார்பில் பூத்தட்டு ஊர்வலத்துடன் மண்டகப்படி நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி காவல்துறை குடும்பத்தினர், போலீஸ் காலனியிலிருந்து மாவிளக்கு மற்றும் பூத்தட்டு ஊர்வலம் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அரவக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழா தமிழ்நாட்டிலேயே அரவக்குறிச்சி மட்டும் காவல்துறைக்கும் மண்டகப்படி நடந்து வருகிறது. அரவக்குறிச்சி காவல்துறைதான் முதன்முதலில் மண்டகப்படி துவங்கப்பட்டுள்ளது. மணல்மேடு பகுதியில் காவல்துறை அதிகாரியாக ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது அரவக்குறிச்சி பகுதியில் திருட்டு குற்ற சம்பவங்கள் அதிகரித்துவந்த நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் அரவக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மனை மணல் மேட்டை சேர்ந்த காவல் அதிகாரி மாரியம்மனை வேண்டியிருந்த நிலையில் குற்ற சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருந்தாக கூறப்படுகிறது.
இதனால், இதனை நினைவு கூறும் வகையில் அரவக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது என்று தெரிவித்த நிலையில் குற்றங்கள் குறைந்தது அரவக்குறிச்சி பகுதியில் அப்போதைய நாச்சிமுத்து கவுண்டர் என்றவர் காவல்துறை மண்டகப்படியை ஆண்டுதோறும் எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று 54-ஆம் ஆண்டு காவல்துறையின் சார்பில் மண்டகப்படியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து ரக வாகனத்தில் மாரியம்மனை கொலுவிருக்க செய்தனர்.
மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் நடைபெற்ற காவல்துறையின் மண்டக படியை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தார். காவல் துறையின் சார்பாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
அரவக்குறிச்சியில் நடைபெறும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை குடும்பங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இவ்வாறான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் கூறுகையில்- கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாத நிலையில் தற்போது பொது மக்களுக்கு நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் இணைந்து சிறப்பாக விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த மாதிரியான திருவிழாக்கள் நடைபெறும்பொழுது மக்கள் மற்றும் காவல்துறையினருக்கு நல்வரவு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். இதுபோன்று இத்திருவிழாவை ஆண்டுதோறும் காவல்துறையினர் செய்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.