திருவாரூரில் வங்கி ஊழியர்கள் போராட்டம் - வாடிக்கையாளர்கள் அவதி
வைரமணியை பணியிட மாற்றம் செய்வது குறித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
திருவாரூரில் வங்கி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருவாரூர் நகரத்தை பொறுத்தவரை இரண்டு லட்சுமி நாராயணா கூட்டுறவு நகர வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வண்டிக்கார தெரு, நெய்விளக்குத் தோப்பு, விஜயபுரம், பேபி டாக்கிஸ் ரோடு, மடப்புரம், காட்டுக்காரத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் சேமிப்பு வைத்துள்ளனர். மேலும் ஓய்வூதியர்கள், தொழிலதிபர்கள் என முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வைப்பு நிதி வைத்துள்ளனர். குறிப்பாக இந்த வங்கியில் வைப்பு நிதிக்கு அதிகளவு வட்டி வழங்கப்படுவதால் பெரும்பாலானவர்கள் இங்கு வைப்பு நிதி வைத்துள்ளனர். மேலும் 25 ஆயிரம் மேற்பட்ட உறுப்பினர்களை இந்த வங்கி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு வங்கிகளுக்கும் சேர்த்து 37 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 17 பேர் நிரந்தர ஊழியர்களாகவும் 20 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இந்த வங்கியில் போராட்டமோ அல்லது வேலை நிறுத்தமோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பகுதியில் இரண்டு ஸ்ரீலட்சுமி நாராயணா கூட்டுறவு நகர வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளைகளில் சுமார் 27346 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் வாய்ப்புத்தொகை வைத்திருக்கும் வாடிக்கையாளராக 35 ஆயிரம் நபர்கள் இருக்கின்றனர். இந்த வங்கி கிளைகளில் மொத்தம் 37 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் இந்த வங்கியின் துணைப்பதிவாளர் அல்லது செயலாட்சியர் பொறுப்பில் கடந்த ஒரு வருடமாக வைரமணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் பொறுப்பேற்ற காலம் முதல் வைப்புத் தொகைக்காண வட்டி விகிதத்தை குறைத்ததாகவும், புதிதாக எவ்வித கடனும் வழங்கப்படுவதில்லை என்றும் வாடிக்கையாளர் மத்தியில் குற்றச்சாட்டு இருந்ததாக கூறப்படுகிறது. துணைப் பதிவாளர் வைரமணியின் இந்த செயல்பாட்டை கண்டித்தும் அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகரப் பகுதி முழுவதும் சுவரொட்டியும் ஒட்டி இருந்தனர். இதனையடுத்து துணைப் பதிவாளர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்கிற உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில் நேற்று பணிக்கு திரும்பினர்.
இந்த நிலையில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கி பணிகள் இரண்டு மணி நேரமாக முடங்கியது. மேலும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு வந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த இரண்டு வங்கிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்குகளை மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் சித்ரா நேரடியாக கவனிப்பார் என்றும் இது போன்ற ஆவணங்களை துணைப்பதிவாளர் வைரமணிக்கு அனுப்ப தேவையில்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வைரமணியை பணியிட மாற்றம் செய்வது குறித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ஊழியர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரமணியை பணியிட மாற்றம் செய்வது குறித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.