மேலும் அறிய

திருவாரூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

தன் வீட்டில் உள்ளவர்  உயிரிழந்து விட்டார் என்ற துக்க நிலையிலும் அவருடைய உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு கொடுத்து பலரை வாழ வைக்கும் அவரது குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் அண்ணாமன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (38). இவரது மனைவி சோபியா (32 ). இவருக்கு மூன்று வயதிலும் 10 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜெயசீலன் திருவாரூர் அருகே புலிவலத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு கடையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது பின்னவாசல் என்ற இடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி படுகாயம் அடைந்தார். 
 
அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயசீலன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் மூளை சாவு அடைந்து விட்டதாக  மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்ததனர்.
 
அதன் பின்னர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதற்காக திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் உரிய சான்றுகள் பெறப்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நேரில் சென்று சென்னை, திருச்சி மற்றும் இதர மருத்துவமனைகளில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினருடன் இணைந்து ஜெயசீலனின் கல்லீரல், இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகளை பிரித்து எடுத்து உரிய மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் வீட்டில் உள்ளவர்  உயிரிழந்து விட்டார் என்ற துக்க நிலையிலும் அவருடைய உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு கொடுத்து பலரை வாழ வைக்கும் அவரது குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
 
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயிலாடுதுறை சேர்ந்த நபர் ஒருவர் சாலை விபத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். இந்த நிலையில் அவருடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முன்வந்த நிலையில் மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் இருந்து மருத்துவர்கள் வருகை தந்து அவருடைய இதயம், கண், சிறுநீரகம் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்து பல நபர்களை இன்று வாழவைத்து வருகின்றார். இதேபோன்று உடல் உறுப்புகளை தானம் செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரையும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டி வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு நபர் சாலை விபத்தில் மூளைச்சாவடந்த நிலையில் அவருடைய உடல் உறுப்புகள் தானம் கொடுத்திருப்பது சக மனிதர்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs GT: தொடக்கமே அதிரடிதான்! கில்லியாக மாறிய கில்.. நெருக்கடியில் பல்தான்ஸ்!
தொடக்கமே அதிரடிதான்! கில்லியாக மாறிய கில்.. நெருக்கடியில் பல்தான்ஸ்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs GT: தொடக்கமே அதிரடிதான்! கில்லியாக மாறிய கில்.. நெருக்கடியில் பல்தான்ஸ்!
தொடக்கமே அதிரடிதான்! கில்லியாக மாறிய கில்.. நெருக்கடியில் பல்தான்ஸ்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Trump Vs Musk: அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக!  பின்னணியில் அமித்ஷா  ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக! பின்னணியில் அமித்ஷா ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
Embed widget