மேலும் அறிய
Advertisement
திருவாரூர் : இரண்டு நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்பு..!
திருவாரூர் மாவட்டத்திற்கு ஓதுக்கீடு செய்யப்படுகின்ற தடுப்பூசி மருந்துகளை கொண்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதிலும் முகாம்களிலும் அந்த பகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்து இல்லாததால், முன் கூட்டியே ஊசிக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட்டு, மற்றவர்களுக்கு ஊசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் போதிய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடும் முகாம் குறித்து முன்கூட்டிய அறிவிப்பு செய்திட அனைவரும் பயன் அடைந்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு நிலவுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவாரூர் உள்பட 11 மாவட்டங்ளில் புதிய தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக அவசியம் என அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அச்சத்தின் காரணமாக ஊசி போட்டு கொள்வதை மக்கள் தவிர்த்தனர். தற்போது கொரோனா 2-வது அலையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாலும், அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி அவசியம் என்பதை உணர்ந்து மக்கள் ஆர்வத்துடன் ஊசியை போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் கொரோனா தடுப்பூசி தேவைக்கு ஏற்ப கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
இதனால் திருவாரூர் மாவட்டத்திற்கு ஓதுக்கீடு செய்யப்படுகின்ற தடுப்பூசி மருந்துகளை கொண்டு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதிலும் முகாம்களிலும் அந்த பகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி மருந்து இல்லாததால், முன் கூட்டியே ஊசிக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்பட்டு, மற்றவர்களுக்கு ஊசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் போதிய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடும் முகாம் குறித்து முன்கூட்டிய அறிவிப்பு செய்திட அனைவரும் பயன் அடைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தினால் நேற்றும், இன்றும் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்படாமல் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 92 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 22 ஆயிரம் நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும், செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்துவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும், தட்டுப்பாடின்றி தடுப்பூசியை மாவட்டத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion