மேலும் அறிய

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!

இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. வரும் வேலைவாய்ப்பு மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். காலதாமதம் இல்லாமல் உடனே உங்க விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு பணி தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க.

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து இயக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) பல்வேறு பதவிகளில் உள்ள 8 காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அல்லது பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இந்தியன் ரயில்வே அல்லது இதர மெட்ரோ அமைப்பின் பணி செய்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வாய்ப்பை தவற விட்டு விடாதீங்க.

இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் பணியிடங்களை நிரப்ப இருக்காங்க. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 8. 

இணை பொது மேலாளர் (சிக்னல்) 1
துணை பொது மேலாளர் (ஆப்ரேஷன்) 1
துணை பொது மேலாளர் (டெலிகாம்) 1
துணை பொது மேலாளர் (பவர் சிஸ்டம் மற்றும் மேல்நிலை உபகரணங்கள்) 1
துணை பொது மேலாளர் (எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல்) 1
துணை பொது மேலாளர் (சிக்னல்) 1
மொத்தம் 8

2026 பிப்ரவரி 11-ம் தேதியின்படி, இப்பணியிடங்களுக்கான வயது, கல்வித்தகுதி ஆகியவை நிர்ணயிக்கப்படுகிறது. இணை பொது மேலாளர் பதவிக்கு அதிகப்படியாக 43 வயது வரை இருக்கலாம். துணை பொது மேலாளர் பதவிக்கு அதிகப்படியாக 40 வயது வரை இருக்கலாம். மேலாளர் பதவிக்கு அதிகப்படியாக 38 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை பொது மேலாளர் பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ.1,45,000 வழங்கப்படும். துணை பொது மேலாளர் பதவிக்கு ரூ.1,25,000 வழங்கப்படும். மேலாளர் பதவிக்கு ரூ.85,000 மாதம் வழங்கப்படும். பிரநிதித்துவ அடிப்படையில் பணியில் சேர்பவர்களுக்கு ஊதிய விதிமுறையில் மாற்றம் உண்டு.

சிக்னல் பிரிவு இணை பொது மேலாளர் பதவிக்கு இசிஇ/ இஇஇ பொறியியலில் பி.இ/ பி.டெக் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துணை பொது மேலாளர் பதவிக்கு இசிஇ/ இஇஇ/ மெக்கானிக்கல்/ கணினி அறிவியல் ஆகியவற்றில் பி.இ/பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜர் பதவிக்கு இசிஇ/ இஇஇ பொறியியல் பிரிவில் பி.இ/பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கு 2 கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படவுள்ளது. நேர்காணல் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். பொது அறிவு, திறன், தகுதி, உடல் திறன் ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ள அனுபவமுள்ளவர்கள் https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.50 என்பதை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வங்கி விவரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து, ஆன்லைன் வழியாக முதலில் பதிவு செய்து, அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரும் மார்ச் 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 044-24378000 என்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம். வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு பேசலாம். மேலும், hr@cmrl.in என்ற இமெயில் முகவரி மூலமும் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே காலதாமதம் செய்யாமல் தகுதியுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை இன்றே அனுப்பிடுங்கள். வாய்ப்பை தவற விட்டு விடாதீங்க பாஸ்.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget