மேலும் அறிய

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

’’வெண்ணாற்றை துார் வார வேண்டும், உடையும் நிலையிலுள்ள பகுதியில் சிமெண்டால் ஆன நிரந்தரமான கான்கீரிட் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை’’

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வெண்ணாறு பிரிகின்றது. இதில் தென்பெரம்பூரில் வெட்டாறு பிரிந்து விடுகிறது. வெண்ணாறு, பள்ளியக்கிரஹாரம் வழியாக மன்னார்குடி, திருவாரூர், நாகை மாவட்டங்கள் வழியாக சுமார் 100  கிலோ மீட்டர் துாரத்திற்கு மேல் சென்று கடலில் கலக்கிறது. வெண்ணாறு ஆற்றில் வரும் தண்ணீர் பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவாயத்திற்கும் பயன்பெற்று வருகிறது. தஞ்சை பகுதிக்கு தேவையான குடிநீர் ஆதாரத்திற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு, கூடலுார் வெண்ணாறில் படுகை அணை கட்டப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக துார் வாராததால், வெண்ணாற்றில் கோரைகள், காட்டாமணக்கு செடிகள் மண்டி  காடுபோல் காட்சியளிக்கிறது.  மேலும் ஆற்றின் நடுவில் கட்டந்தரையாக மாறி, அதில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது.  மேட்டூரிலுள்ள,  காவிரி ஆற்றில் அபரிதமாக தண்ணீர் வந்தால், அந்த தண்ணீரை, காவிரி ஆற்றிலும், வெண்ணாற்றில் தான் அதிகமாக திறந்து விடுவார்கள். ஆற்றில் தண்ணீர் வந்தாலும், துார் வாராததால் வரும் தண்ணீரின் போக்கு மாறி, பக்கவாட்டு கரைகளை உடைத்து, வெண்ணாற்றின் கரையோரங்களில் உள்ள சுங்கான்திடல், பள்ளியக்கிரஹாரம், குலமங்கலம், கூடலுார் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலை கேள்வி குறியாகும். மேலும் கூடலுாரிலுள்ள படுகை அணை உடையும் அபாயம் நிலை உள்ளது என விவசாயிகள் அறிவுறுத்தி வந்தனர்.

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணலோடை கிராமம், பைபாஸ் சாலை வெண்ணாறு தென்கரையில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு கரையில் அரிப்பு ஏற்பட்டது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்ற உத்தரவிட்டதையடுத்து, பொதுப்பணித்துறையினர், வெண்ணாறு தென்கரையில் ஆய்வு செய்த போது, கரை உடையும் அபாய நிலை இருந்தது. இதனையடுத்து, போர்கால அடிப்படையில், சவுக்கு மரத்தை கொண்டு, மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமான அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மூன்று நாட்களில் முடியும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தள்ளனர். பொதுப்பணித்துறையினர், ஆய்வு செய்து கண்டு பிடித்து துரிதமாக நடவடிக்கை எடுத்ததால், பல ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி காப்பாற்றப்பட்டது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வெண்ணாறு 100 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனத்திற்காகவும் பயனடைந்து வருகிறது, வெண்ணாற்றில் வருடந்தோறும் துார் வாராததால், கோரைகள் மண்டியது. ஆற்றின் நடுவில் கட்டாந்தரையாக மாறி அதில் கருவேல மரங்கள் முளைத்து விட்டன. இதனால் ஆற்றில் தண்ணீர் வரும்போது, போக்கு மாறி, பக்கவாட்டு கரையை உடைத்து கொண்டு கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றில் வெள்ளம் வந்த போது, குலமங்கலம், கூடலுார் இடையில் கரையை உடைத்து கொண்டு சாலை துண்டிக்கப்பட்டதால், 5 கிராமங்கள் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.  கடந்த 2018 ஆம் ஆண்டு கல்விராயன்பேட்டையிலுள்ள கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், பல நுாறு ஏக்கர் நாசமானது. இதே போல் வெண்ணாற்றை தரமான முறையில் துார் வாராததால், கரைகள் உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கண்காணித்ததால், கரை உடையாமல் இருக்க கரையை பலப்படுத்தும் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் பல நுாறு ஏக்கர் சம்பா சாகுபடி, வீணாகாமல் காப்பாற்றப்பட்டது.

தஞ்சாவூர் வெண்ணாறு கரை உடையும் அபாயம்-சரியான நேரத்தில் கண்டறிந்ததால் பெரும் பாதிப்பு தவிர்ப்பு

தற்போது வெண்ணாறு தென்கரையில் ஏற்பட்டுள்ள 50 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதனை 5 டன் சவுக்கு மரத்தை கொண்டு, சுமார் 5 ஆயிரம் மணல் மூட்டைகள், 25 கூலி தொழிலாளர்கள் கொண்டு கரையைபலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.  தற்போது வெண்ணாறு கரையை தற்காலிகமாக பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதி லேசான திருப்பமாக இருப்பதால், எந்நேரத்திலும் கரைகள் உடைய வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், போர்கால அடிப்படையில் வெண்ணாற்றை துார் வார வேண்டும், உடையும் நிலையிலுள்ள அப்பகுதியில் சிமெண்டால் ஆன நிரந்தரமான கான்கீரிட் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என விவசாயிகள் சார்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget