மேலும் அறிய

திருச்சிக்கு வரும் 11ம் தேதி வருகை புரியும் பிரதமர் மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேசிய ஜனநாயக கூட்டணியினர், ஆளும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர களப் பணியை தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி வருகை.

தஞ்சாவூர்: திருச்சியில் வருகிற 11-ம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வரும் மே 10, 2026-க்கு முன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய 16-வது சட்டமன்றத்தின் (2021-2026) ஆட்சிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து இந்த தேர்தல் நடக்கிறது. இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன..

2021-ல் திமுக (மு.க. ஸ்டாலின் தலைமையில்) வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது 2026 தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகளிடையே தொடங்கியுள்ளன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைப் பெற்று, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதிமுக கூட்டணி 75 இடங்களை வென்று எதிர்கட்சியானது.

தற்போதைய 2026 தேர்தலில் அதிமுக, திமுக, மற்றும் புதிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினர், ஆளும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர களப் பணியை தொடங்கியுள்ளனர்.
 
பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

அந்த வகையில் மீண்டும் வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற உள்ள அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பஞ்சப்பூரில் விழா நடைபெறும் பகுதிக்கு செல்கிறார். முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

அதன் பின்னர் அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக்கூட்டம் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு எடமலைப்பட்டி புதூர் வழியாக காரில் திருச்சி விமான நிலையம் செல்லும் மோடி அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாநகர பொறியாளர் சிவபாதம், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் வருகை, பாதுகாப்பு, பொதுமக்கள், கட்சியினர் கலந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளதால் தேர்தல் களம் கூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி
மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
TN Chief Secretary: போடு… தமிழக தலைமைச் செயலாளரையே மாற்றிய தேர்தல் ஆணையம்; யார் புதிய செயலர்?
TN Chief Secretary: போடு… தமிழக தலைமைச் செயலாளரையே மாற்றிய தேர்தல் ஆணையம்; யார் புதிய செயலர்?
Anbumani: முதல்வரைச் சுற்றி 4 வியாபாரிகள்; திமுக கூப்பனை வாங்க 3 ஆயிரம் லஞ்சம்- அன்புமணி குற்றச்சாட்டு
Anbumani: முதல்வரைச் சுற்றி 4 வியாபாரிகள்; திமுக கூப்பனை வாங்க 3 ஆயிரம் லஞ்சம்- அன்புமணி குற்றச்சாட்டு
TVK Vijay: கிட்டார் முதல் கூல்ட்ரிங்ஸ் வரை.. வழிநெடுக விஜய்க்கு கிஃப்ட் கொடுத்த தொண்டர்கள், ரசிகர்கள்!
TVK Vijay: கிட்டார் முதல் கூல்ட்ரிங்ஸ் வரை.. வழிநெடுக விஜய்க்கு கிஃப்ட் கொடுத்த தொண்டர்கள், ரசிகர்கள்!
Embed widget