இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
டைடல் நியோ பார்க் நிறுவனங்களில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது... இன்ஜினியரிங் வேலை வாய்ப்பு

தஞ்சாவூர்: இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள்... செம வேலை வாய்ப்பு கைநிறைய சம்பளத்தில் உங்களுக்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உடனே அப்ளை பண்ணுங்க. ஆமாங்க. டைடல் பார்க் வேலை வாய்ப்புதான் அது.
விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோட்டில் செயல்பட்டு வரும் டைடல் நியோ பார்க் நிறுவனங்களில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 11.03.2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: BE in Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 50,000
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: admin@tidelneo.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.03.2026. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்திடுங்கள். வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.























