மேலும் அறிய

தாமதமாகும் சீரமைப்பு : மூன்றாண்டுகளாக முடங்கிப்போன தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவை சீரமைக்கப்படும் என கூறி மூன்றாண்டுகளாக பூங்காவை பூட்டிவிட்டு, எந்த ஒரு பணியையும் தொடங்காமல் தொடக்க நிலையிலேயே முடங்கியுள்ளதால், தஞ்சாவூர் பகுதி மக்கள் பொழுதுபோக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர். சரித்திர புகழ் மிக்க தஞ்சாவூரில் பல்வேறு சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது சிவகங்கை பூங்காவாகும். தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871-ம் ஆண்டு நகராட்சியால் உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது. சுமார் 10 ஏக்கரில் பூங்காவும் உள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீ்ழ், தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவை சீரமைக்கப்படும் என கூறி மூன்றாண்டுகளாக பூங்காவை பூட்டிவிட்டு, எந்த ஒரு பணியையும் தொடங்காமல் தொடக்க நிலையிலேயே முடங்கியுள்ளதால், தஞ்சாவூர் பகுதி மக்கள் பொழுதுபோக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர். சரித்திர புகழ் மிக்க தஞ்சாவூரில் பல்வேறு சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது சிவகங்கை பூங்காவாகும். தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871-ம் ஆண்டு நகராட்சியால் உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது. சுமார் 10 ஏக்கரில் பூங்காவும் உள்ளது. 

தாமதமாகும் சீரமைப்பு : மூன்றாண்டுகளாக முடங்கிப்போன தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா..!
பூங்காவில் ஏராளமான பசுமையான மரங்கள், புல்வெளிசெடிகள், மான்கள், ஒட்டகம், நரி, குரங்குகள், முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், பறவைகள், கிளிகள் என ஏராளமாக விலங்கினங்களும், பறவைகளும் வளர்க்கப்பட்டு வந்தது. பின்னர் சிறுவர்களுக்கான ரயில், தொங்குபாலம், படகு சவாரி, நீச்சல் குளம், அறிவியல் பூங்கா, நீர்சறுக்கு விளையாட்டுகளும் கொண்டுவரப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா வரும் அனைவரும் பூங்காவுக்கு வந்து செல்லும் வகையில் அனைத்து பொழுதுப்போக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டதால், இங்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் பேரும் வந்து சென்றனர்.
 
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
 
சிவகங்கை பூங்காவில் ஏற்கெனவே இருந்த பொழுதுபோக்கு அம்சங்களை மேலும் செம்மைப்படுத்த ஏதுவாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் புதிதாக சிறுவர்களுக்கான ரயில் பெட்டிகள், பூங்கா முழுவதும் புதிய நடைபாதை, குளத்தில் நடுவே உள்ள கோயிலுக்கு சென்று வர புதிய தொங்கு பாலம், புதிய படகுகள், பூங்கா முழுமையும் அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், 50 பேர் விளையாடக்கூடிய ஸ்கேட்டிங் தளம், சேதமடைந்த இடங்களில் சுற்றுச்சுவர்கள் என பூங்காவை முழுமையாக சீரமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக ஆறு மாத காலம் பூங்காவை மூட மாநகராட்சி முடிவு செய்தது. பூங்காவிலிருந்து மான்கள் கோடியக்கரை சரணாலயத்திலும், நரிகள் உள்ளிட்ட பறவைகளை வண்டலூர் மிருககாட்சி சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பூங்கா 2019-ஆம் ஆண்டு மூடப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டது. 
 
ஆனால் பல மாதங்களாகியும் பணிகளை தொடங்காமல் மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டது. இதற்கிடையில் 2020-ஆம் ஆண்டு பெரியகோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் பூங்கா பணிகள் தொடங்கப்படும் என கூறப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது பூங்காவில் இருந்த புல்வெளிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு அங்கு விவிஐபிக்களின் கார் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. நடைபாதைகள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டு, அங்கிருந்த ஃபேவர்பிளாக் கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. இதற்கிடையில் இந்திய தொல்லியல் துறை பூங்காவில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தடை உத்திரவை நீதிமன்றத்தில் வாங்கியது. தற்போது நீதிமன்ற தடை நீங்கியும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதனிடையே பூங்காவின் கிழக்குப் பகுதியில் 7 அடி உயரத்துக்கு இருந்த சுற்றுச்சுவரை தொல்லியல் துறையினர் இடித்து அகற்றிவிட்டு, அங்கு இரும்பு கம்பியை கொண்டு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

தாமதமாகும் சீரமைப்பு : மூன்றாண்டுகளாக முடங்கிப்போன தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா..!
பூங்காவின் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை தொடங்கவில்லை என்பது தான், தஞ்சாவூர் பகுதி மக்களின் வருத்தம் கலந்த கோபமாகவும், வேதனையாகவும் உள்ளது. இந்த பூங்கா தொடங்கி 150 ஆண்டுகளாகியுள்ளது. இந்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடியிருக்க வேண்டிய சூழலில், இப்படி பூங்கா பூட்டப்பட்ட எந்த பணியும் நடைபெறாமல் இருப்பது வேதனையின் உச்சமாகும்.  
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மக்கள் கூறியதாவது, தமிழகத்திலேயே நகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்காவில் இதுதான் மிகப்பெரியதும், பழமையானதுமாகும். இங்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் தற்போது சீர்குலைக்கப்பட்டு விட்டது.ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருவாயை இந்த பூங்கா பெற்று தந்தது. பூங்காவை சீரமைக்கிறோம் எனக்கூறி அதற்கான எந்த பணியையும் துவங்கவில்லை. இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பு என்பது பெரிய கோயிலுக்கு மட்டும் தான். அதுவும் பெரிய கோயில் வாசல், அகழி அனைத்தும் மாநகராட்சி வசம் உள்ளது. பூங்காவும் 150 ஆண்டுகளாக மாநகராட்சியில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், எப்படி எங்களது இடம் என கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. இதை எடுத்துக்கூற நிர்வாகத்தில் திறமையான அதிகாரிகள் இல்லை. 
 
பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அதில், இரும்பு தடுப்புகளை பொருத்தியுள்ளனர். பூங்காவில் என்ன இருக்கிறது என்பதை வெளியே இருந்து தெரிந்து கொள்ளும் போது, எப்படி பணம் கொடுத்து உள்ளே செல்வார்கள். இந்த இரும்பு தடுப்புகளை அமைத்ததை தடுக்காமல் நிர்வாகம் வேடிக்கை பார்த்தது தான் வியப்பாக உள்ளது என்கிறார்கள் பொதுமக்கள். இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறுகையில்.. பூங்காவில் குறிப்பிட்ட சில பணிகளை செய்யக்கூடாது என கூறி மாநகராட்சிக்கு அனுமதி வழங்கி விட்டோம். இது தொடர்பான வழக்குகள் முடிந்து விட்டது. சுற்றுச்சுவருக்கு பதில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கிருக்கும் பசுமையை எல்லோரும் கண்டுகளிக்கலாம் என்பதால் அமைக்கப்பட்டுள்ளது என்றார். எப்படியோ  தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவை பொதுமக்கள் அனைவரும் வந்து மகிழ்ச்சியோடு சுற்றிப்பார்க்கும் பூங்காவாக விரைவில் அமைத்து தர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தஞ்சாவூர் மாவட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget