தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
பெண்கள் படித்து முதலிடத்திலும், பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், சட்டத்தில் சரிசம உரிமை இருந்தாலும் வீட்டையும், சமூகத்தையும் பொறுத்த அளவில் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். தஞ்சாவூரில் மகளிர் தினவிழா

தஞ்சாவூர்: பெண்கள் உண்மையான சமூக விடுதலையை பெற வேண்டும் என்று தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் இடதுசாரிகள் பொதுமேடை நிர்வாகிகள் உறுதியேற்றனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்டிஎல்எப் மாவட்ட பொருளாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். நிர்வாகி தனபால் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பெண்களுக்கு இனிப்பு வழங்கி, உறுதி ஏற்கப்பட்டது. இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய போது, உலகில் முதன்முதலாக மனித சமூகம் தோன்றிய முதல் புரதான பொதுவுடமை சமூகத்தில் பெண்களே அந்த குழுதிற்கு தலைவியாகவும், நிர்வாகத்தையும் நடத்தி வந்தார்கள்.
பின்னர் உற்பத்தி சாகுபடி முறை வந்த பிறகு பெண்கள் குடும்பத்தின் தேவைகளையும், ஆண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் தேவைகளையும் நிறைவேற்ற அடிமைகளாக்கப் பட்டார்கள். இன்றைய சமூகம் ஏஐ தொழில் நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்து இருந்தாலும், பெண்கள் படித்து முதலிடத்திலும், பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், சட்டத்தில் சரிசம உரிமை இருந்தாலும் வீட்டையும், சமூகத்தையும் பொறுத்த அளவில் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.
இந்நிலையினை மாற்ற நாம் அனைவரும் பெண்களுக்கு துணை நிற்க வேண்டும் என உரையாற்றினார். மகளிர் தின விழா நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிராக நாள்தோறும் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சமூக வன்கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் சட்டம் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. சட்டத்தை கடுமையாக நடைமுறைப் படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆண்களுக்கு நிகரான சரிநிகர் சமமான உரிமைகள் பெறுவதற்கும், வீட்டிலிருந்தும், சமூகத்தில் இருந்தும் உண்மையான விடுதலையை பெண்கள் பெறுவதற்கு நாம் அனைவரும் துணை நிற்போம் என்று இடதுசாரிகள் பொது மேடை சார்பில் உறுதி ஏற்கப்பட்டது.
நிகழ்வில் இன்சூரன்ஸ் லிகாய் சங்க முன்னாள் தலைவர் காமராஜ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், மார்க்சிய பெரியார் அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுனர் கூட்டமைப்பின் சையத் கலீம் பாட்சா, உரிமைக்குரல் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















