இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
தஞ்சை மக்களோட 'வடம்' திரைப்படத்தைப் பார்க்குறது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த படம் 'வடமாடு மஞ்சுவிரட்டு' குறித்த கதை. இதில் நான் மாடு வளர்க்குற கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். நடிகர் விமல்

தஞ்சாவூர்: இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா. அதான் எனக்கு வேலையா. அந்தக் காரை யார் ஓட்ரான்னு எனக்கு என்ன தெரியும் என்று நடிகர் விமல் அட்வைஸ் எதற்காக கூறினார் தெரியுங்களா?
நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தஞ்சையில் உள்ள லாங்வெல் மால் திரையரங்கில் ரசிகர்களுடன், நடிகர் துரை.சுதாகர், படத்தின் இயக்குனர் கேந்திரன்முனியசாமி ஆகியோருடன் நடிகர் விமல் பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சை மக்களோட 'வடம்' திரைப்படத்தைப் பார்க்குறது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த படம் 'வடமாடு மஞ்சுவிரட்டு' குறித்த கதை. இதில் நான் மாடு வளர்க்குற கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். இதுல 'பாண்டிமுனி'னு ஒரு மாடு நடிச்சிருக்கு. அதோட உண்மையான பெயர் சோழன்.

வடம் திரைப்படம் பொழுது போக்கு அம்சம் கொண்ட திரைப்படம். இதில் ஒரு கண் பார்வை சரியாக தெரியாத மாட்டை வில்லன் அடிமாட்டுக்கு விற்க, அந்த மாடு கதாநாயகன் கையில் கிடைத்து அதை பழக்கி, மஞ்சுவிரட்ல முதன்மையான மாடாக ஆக்கி காட்டுறதுதான் கதை. 'ஊனம் ஒரு குறை கிடையாது. நன்றாக பயிற்சி எடுத்துக்கிட்டா எல்லாமே ஜெயிக்கலாம்ங்கிறதுதான் இந்த படத்தோட கதை.
உலக மகளிர் தினத்தையொட்டி அனைத்து பெண்களுக்கும் எனது வாழ:த்துக்கள். அவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு மாதிரி. தாய் குலம் இல்லாத வாழ்க்கையை யோசிச்சுக்கூட பார்க்க முடியாது. நடிகர் விஜய்யின் கூட்டத்திற்கு கூட்டம் கூடுகிறது. கூட்டத்திற்கு செல்பவர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவரின் வாகனத்தை பின்தொடரக்கூடாது. அது தவறான விஷயம். நடிகரை பிடிக்குதா? கூட்டத்திற்கு செல்லுங்கள் விசில் அடியுங்கள், கை தட்டுங்கள். மனசுக்குள்ள வச்சுக்கங்க. அதுக்காக உயிரைப் பணயம் வச்சு போகணும்ன்ற அவசியம் எனக்குத் தெரிஞ்சு கிடையாது. அந்த மாதிரி பண்ணாதீங்க.
நடிக்கும் வேலையே பெரியதாக உள்ளது. நான் அரசியலுக்கு வருவதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று. தஞ்சை மாவட்டம் எனக்கு ரொம்ப நெருங்குன மாவட்டம்தான். நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற நல்ல இதயங்கள் எல்லாம் இந்த தஞ்சை மண்ணுல இருக்காங்க. நான் நடிச்ச 'களவாணி' படமும் இந்த மண் சார்ந்த படம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய் திரிஷா பற்றிய கேள்விக்கு இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா. அதான் எனக்கு வேலையா. அந்தக் காரை யார் ஓட்ரான்னு எனக்கு என்ன தெரியும் என்று நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும் விஜய் முதலமைச்சராக வருவாராஎன்ற கேள்விக்கு, அது எனக்கு தெரியாது. தேர்தலுக்குப் பிறகு தெரியவரும் என்றார்.
வடம் படத்தின் இயக்குநர் கேந்திரன்.வி கூறியதாவது: 'வடம்' படம் வந்து ரிலீஸ் ஆகி நல்லா போயிட்டு இருக்கு. வட மஞ்சு பத்தி மையமா வச்சு இந்த படம் எடுத்திருக்கோம். ஃபேமிலியோட போய் பார்க்க வேண்டிய ஒரு படம், ரொம்ப நல்ல படம். அடுத்த படம் மிக விரைவில் அறிவிப்போம். நான் பிறந்து வளர்ந்த என்னோட ஒரு கிராமத்துல பிறந்து வளர்ந்து, ஒரு மாடுகளோடயே... விவசாய குடும்பம். அப்ப மாட்டுக்கும் நமக்கும் ஆன உறவு தெரியும். எல்லாரும் ஒவ்வொருத்தர் பத்தி கதை சொல்றாங்க. கண்ணுக்குத் தெரியாத இயந்திரங்களை வச்சே படம் எடுக்கும்போது, கண்ணுக்கு முன்னாடி இருக்கிற உயிர் மாட்டைப் பத்தி நாம பேசணும்னு நினைச்சேன்.
அதான் இந்த படத்தோட கான்செப்ட். படம் பார்த்த உடனே தெரியும். யாரு இந்த கதை எழுதினாலும் அவர்கிட்டதான் போய் நிப்பாங்க. நானும் அதே மாதிரி தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















