மேலும் அறிய

”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!

எண்ணற்ற விவசாயத் தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புது ஆறு நிகழ்த்திய புரட்சி பற்றி தெரியுங்களா. புது ஆறு என்று அனைவரும் அழைப்பது கல்லணைக்கால்வாயைதான்.

தஞ்சாவூர்: எண்ணற்ற விவசாயத் தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புது ஆறு நிகழ்த்திய புரட்சி பற்றி தெரியுங்களா. புது ஆறு என்று அனைவரும் அழைப்பது கல்லணைக்கால்வாயைதான். விவசாயத்துக்காக வெட்டப்பட்ட இக்கால்வாயின் வழித்தடத்தில் ஏற்கெனவே ஓடிய வடிகால்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. 

தஞ்சாவூர் மாவட்டத்தின் வடக்கு பகுதி காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளால் செழிப்பான பூமியாகவும் அதற்கு நேர் மாறாக தெற்கு பகுதி வறண்ட பூமியாக இருந்தது. இப்பகுதியில் காவிரியிலிருந்து பாசனம் பெறக்கூடிய ஆறுகளோ, வாய்க்கால்களோ இல்லாததே இதற்குக் காரணம்.

வானம் பார்த்த பூமியாக காணப்பட்ட பகுதி

வானம் பார்த்த பூமியாகக் காணப்பட்ட இப்பகுதியில் மழை பெய்யாவிட்டால் விவசாயமே இல்லை என்ற நிலைமை 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. சாகுபடி நிலங்கள் ஏராளமாக இருந்தாலும் அதில் எதையுமே சாகுபடி செய்ய முடியாத நிலைதான். விவசாயிகள் வறட்சியையே சந்தித்து வந்ததால் மிகவும் வெறுப்படைந்து இருந்தனர். இந்நிலையில்தான் இப்பகுதியை நன்செய் நிலமாக மாற்றுவதற்கான முயற்சியாக செயற்கை ஆறு உருவாக்கப்பட்டது. அதுதான் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய்.

1925ம் ஆண்டில் தொடங்கி 1934, ஆகஸ்ட் 28ம் தேதி திறக்கப்பட்டது

மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாய் என்ற பெயரில் இந்தப் புது ஆறு வெட்டப்பட்டது. இப்பணி 1925ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1934, ஆகஸ்ட் 28ம் தேதி திறக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியுடன் இந்தக் கால்வாய் வெட்டப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்தது.

”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!

கடைசி வரை விவசாயத்தே பயன்படும் தண்ணீர்

இந்தக் கால்வாயை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளரான கர்னல் டபிள்யூ.எம். எல்லிஸ் வடிவமைத்தார். இயற்கையாக அமைந்த ஆறுகள் கடைசியில் கடலில் சென்று கலக்கும். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஆறு கடைசி வரை விவசாயத்துக்கு பயன்படும் விதமாக ஏரியில் முடிக்கப்பட்டுள்ளது.

கல்லணைத் தலைப்பில் தொடங்கி பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, தற்போதைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் ஆகிய வட்டங்களில் ஏறத்தாழ 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் விதமாக 148.76 கி.மீ. தொலைவுக்கு இக்கால்வாய் வெட்டப்பட்டது. மணமேல்குடி அருகேயுள்ள மும்பாலை ஏரியில் முடிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது.

நரம்பு மண்டலம் போல் காணப்படும் வரைப்படம்

இதில், 109 கி.மீ. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும், மீதமுள்ள தொலைவு சுதந்திர இந்திய அரசாலும் வெட்டப்பட்டது. இந்த "ஏ' பிரிவு கால்வாயிலிருந்து பி, சி, டி, இ என வெட்டப்பட்ட 327 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ. இக்கால்வாய் மூலம் 694 பாசன ஏரிகளுக்கும் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டது. எனவே, இதன் வரைபடத்தைப் பார்த்தால் நரம்பு மண்டலம் போன்று இருக்கும். மேட்டூர் அணையைக் கட்டப்பட்டபோது, கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயும் வெட்டப்பட்டது. முதலில் இந்தக் கால்வாயைப் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், புதுக்கோட்டை சமஸ்தானம் இத்திட்டத்தைச் சில காரணங்களால் தவிர்த்த நிலையில், இதைத் தஞ்சாவூர் வழியாகக் கொண்டு செல்ல அப்போதைய திவான்பகதூர் சர். சி.பி. ராமசாமி அய்யர் பெருமுயற்சி மேற்கொண்டார்.

லண்டனிலிருந்து வந்த இயந்திரங்கள்

இந்த நீர் வழித்தடத்தில் பூதலூரிலிருந்து தஞ்சாவூர் பெரியகோயில் வரை ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவுக்கு பாறை இருந்தது. இதற்காக லண்டனிலிருந்து தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்ட இரு இயந்திரங்களின் உதவியுடன் பாறைகளை உடைத்து, இக்கால்வாய் வெட்டப்பட்டது. இக்கால்வாயை வெட்டுவதற்கு அக்காலத்தில் மொத்தம் ரூ. 4.50 கோடி செலவாகி உள்ளது.

முற்றிலும் மாறுபட்ட கல்லணைக்கால்வாய்

இந்தக் கால்வாய் பாசனப் பொறியியலின் உன்னதமாகவும் போற்றப்படுகிறது. கல்லணையிலிருந்து பிரியும் மற்ற ஆறுகள் இயற்கையானவை. இந்த ஆறுகளுக்கு முறையான கரையோ, வழித்தடமோ இல்லாததால், பெரு வெள்ளக் காலங்களில் பாதை மாறிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இவற்றில் மழை நீர், கழிவு நீர் கலப்பதும், வெள்ள காலங்களில் கரைகளை உடைத்துக் கொண்டு வெளியேறுவதும் இயல்பானது. இந்த ஆறுகளிலிருந்து கல்லணைக் கால்வாய் முற்றிலும் மாறுபட்டது.

விவசாயத்துக்காக வெட்டப்பட்ட இக்கால்வாயின் வழித்தடத்தில் ஏற்கெனவே ஓடிய வடிகால்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் உருவாக்கப்பட்டது. இந்தக் கால்வாயில் எங்குமே கழிவு நீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத அளவுக்கு குறுக்கே சைபன் என்கிற சுரங்கங்கள், மேலே சூப்பர் பேசேஜஸ் என்கிற மேல்நிலை கால்வாய்கள், பெரு வெள்ளக் காலத்தில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற தொட்டி பாலங்கள், தண்ணீரின் விசையைச் சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் நீரொழுங்கிகள் போன்ற புதுமைகளும் ஏற்படுத்தப்பட்டன.

மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும் புது ஆறு

பெரு வெள்ளக் காலங்களில் தண்ணீரை எளிதில் வெளியேற்றும் வகையில் இயற்கை இடர்பாடு மீட்பு தத்துவத்துக்கு உதாரணமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த புது ஆறு. இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், பாசனத்துக்காக வெட்டப்பட்ட இந்தச் செயற்கை ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்கிறது. கடைமடைப்பகுதி வரை தண்ணீர் தடையில்லாமல் செல்லும் விதமாக கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சம உயர் கால்வாய் இது. இதனால், இந்த ஆறு தஞ்சாவூர் பெரிய கோயிலை ஒட்டி 30 ஆடி பள்ளத்திலும், ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு பகுதியில் 30 அடி உயரத்திலும் செல்லும்.
 
அடிப்படையில் இது ஒரு கால்வாயாக இருந்தாலும், மக்கள் இதை புது ஆறு என்றே கொண்டாடுகின்றனர். அந்த அளவுக்கு தென் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மாற்றத்தை இந்த ஆறு. எண்ணற்ற விவசாயத் தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget