Viduthalai 2 OTT: வெற்றிமாறனுக்கு ஏற்பட்ட அவமரியாதை! 'விடுதலை 2' ஓடிடி ரிலீஸால் கொந்தளித்த ரசிகர்கள்!
வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த விடுதலை 2 படமான ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் தான் விடுதலை. கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் 2ஆம் பாகம் உருவாக்கப்பட்டது. இதில் வாத்தியாராக நடித்த விஜய் சேதுபதியை சுற்றி கதை நகரும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்தது. அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் ரூ.50 கோடி வரையில் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது. கிட்ட தட்ட 90 கோடி வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'விடுதலை 2' செலவு செய்த வசூலை கூட பெறாததால் இது தோல்வி படங்களில் லிஸ்டில் இணைந்தது.
பொதுவாக, சில தோல்வி படங்கள் கூட, உரிய அறிவிப்பு வெளியான பின்னரே ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கம். ஆனால், இந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 'விடுதலை 2' திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 தளங்களில் வெளியாகியுள்ளது. ஓடிடி நிறுவனத்தின் இந்த செயல் இயக்குனர் மற்றும் படக்குழுவினரை அவமதிப்பது போல் உள்ளது என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

