"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
பொங்கலையொட்டி தமிழ்ப் புத்தாண்டுகள் என குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் தினத்தையொட்டி தமிழ்ப் புத்தாண்டுகள் என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். எக்ஸ் தளத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த விஜய், "பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த விஜய்:
கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள். 2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் முதன்மை பண்டிகையாக திகழ்வது பொங்கல் பண்டிகை. உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். மார்கழி முடிந்து தை பிறக்கும் முதல் நாள் தமிழர்களால் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாள்!
— TVK Vijay (@tvkvijayhq) January 13, 2025
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான… pic.twitter.com/cKWbdjZsXU
பெரும்பாலான தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், திராவிட இயக்கங்களை பொறுத்தவரையில், பொங்கல் பண்டிகையையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக திராவிட கொள்கைகளை ஏற்று கொண்ட தவெகவும் தை முதல் நாளான பொங்கல் தினத்தை தமிழ்ப் புத்தாண்டு என குறிப்பிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்

