விஷாலுக்கு இப்படியாக நான் காரணமா? டாக்டரோட சர்டிஃபிகேட் தரவா? இயக்குநர் பாலா!
விஷாலின் உடல்நிலைக்கு பலரும் தன்னை குற்றம் சாட்டி வரும் நிலையில் அதற்கான மருத்துவர் சர்டிஃபிகேட் வேண்டுமே என்று பாலா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான மதகஜராஜா 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியாவதற்கு முன் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால் உடல் மெலிந்து கை நடுங்கியபடி பேசினார். உண்மையில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தினர்.
ஆனால், பலரும் பாலாவை காரணமாக முன் வைத்தனர். பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷால் மாறு கண் வைத்து நடித்ததால் தான் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. மேலும், தலைவலி அதிகமாகவும் வந்தது. இதற்காக அவர் குடிப்பழக்கத்திற்கு உள்ளானார். இதனால் தான் விஷாலுக்கு உடல் மெலிந்தது. ஆனால், விஷால் இப்போது உடல் நலம் தேறி வருகிறார். தன்னுடைய உடல்நலம் குறித்து விமர்சித்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தான் விஷாலின் இந்த நிலைக்கு தன்னை காரணமாக கூறியவர்களுக்கு எதிராக இப்போது பாலா பொங்கி எழுந்துள்ளார். பாலாவின் வணங்கான் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தில் சக்ஸஸ் மீட் இன்று சென்னையி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாலா, விஷாலின் உடல் நல பிரச்சனைக்கு முடிவு கட்டினார்.
அவன் இவன் படத்தில் விஷாலின் கண்ணை நான் தைத்து விட்டதாக ஒருவர் கூறியிருந்தார். எப்படி ஒருத்தருடைய கண்ணை தைக்க முடியும்? இதற்கு மருத்துவர் சர்டிஃபிகேட் வாங்கி தர முடியும் என்று பதிலடி கொடுத்துள்ளார். அப்போ உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடக்கலையா என மீண்டும் ரசிகர்கள் சந்தேக கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

