Rajinikanth: பயந்து நடுங்கிய ரஜினி! 90 சதவீத டூப்பால் ஹிட்டாக வேண்டிய படம் பிளாப் ஆகிடுச்சு - மனோ பாலா பளீச்!
ஸ்டண்ட் காட்சியில் ரஜினிகாந்த் நடிக்க முடியாது என்று சொல்லிவிடவே, வேறு வழியில்லாமல் 90 சதவிகித ஸ்டண்ட் காட்சியை டூப் போட்டு தான் எடுத்தோம் என்று பிரபல இயக்குநர் பேசியது இப்போது வைரலாகிறது.

எம்ஜிஆர்., சிவாஜி கணேசன் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஹீரோவாக நடிப்பதற்கு முன் வில்லனாகவும், சப்போர்டிங் ஆக்டராகவுமே பல படங்களில் நடித்துவிட்டார். 1975 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் துணை நடிகராக நடித்திருந்தார்.
ரஜினிகாந்த்:
ஆனால், ரஜினிகாந்த் தெலுங்கு சினிமாவில் தான் முதல் முறையாக ஹீரோவாக நடித்தார். அவரை ஹீரோவாக்கியவர் இயக்குநர் கே பாலசந்தர் தான். இப்போது தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்து வரும் ரஜினிகாந்த், சினிமாவின் ஆரம்பகாலகட்டங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார். அப்படி அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது வயது காரணமாக சண்டைக் காட்சிகளில் அவருக்குப் பதில் டூப் போடப்படுகிறது. ஆனால், அவர் இளம் வயதிலும் கூட அவருக்கு டூப் போடப்பட்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அப்படி அவர் நடிக்க மறுத்தது குறித்து, அந்தப் படத்தின் இயக்குநர் கூறிய பேட்டி ஒன்று தான் இப்போது வைரலாகி வருகிறது.
மனோபாலா இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா, பாண்டியன், ரகுவரன், சங்கிலி முருகன், மலேசியா வாசுதேவன், ஒய் ஜி மகேந்திரா ஆகியோர் பலர் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் ஊர்க்காவலன். தனது தம்பியின் கொலைக்கு நீதி கிடைக்க கிராமத்து இளைஞனாக ரஜினிகாந்த் (காங்கேயன்) நடத்தும் போராட்டம் தான் இந்தப் படத்தோட கதை. கிராமத்து மூட நம்பிக்கையையும் இந்தப் படம் விவரிக்கிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் குதிரையில் வரும் காட்சிகள் அதிகமாக இருக்கும். பல சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் குதிரையோடு தான் இருப்பார். ஆனால் ரஜினிகாந்த் சொந்த குதிரையில் ஏறி சவாரி செய்தபோது, அது கீழே தள்ளி விட்டுவிட்டதாம். அதில் இருந்தே ரஜினிகாந்துக்கு குதிரை என்றால் பயம் ஏற்பட்டுள்ளது.
குதிரையில் வந்து சண்டை போடும் 90 சதவீத காட்சிகளை டூப் வைத்து இயக்கிய ஒளிப்பதிவாளர். 4 மணி நேரம் மட்டுமே ரஜினிகாந்தை வைத்து குளோஸ் அப் காட்சிகளை எடுத்துள்ளார். 90 சதவீத காட்சிகள் டூப் வைத்து எடுக்கப்பட்டதால், பல மாஸ் சீன்களில் ரஜினிகாந்தின் முகம் மிஸ் ஆனது. எனவே இதுவே இந்த படத்தின் தோல்விக்கும் காரணமாக அமைந்ததாக மனோபாலா தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















