தனுஷை கேட்காமல் முடிவெடுத்தாரா வெற்றிமாறன்..?புதுப்பட அறிவிப்பால் வந்த சிக்கல்
ஆர்.எஸ் என்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வெற்றிமாறன் - தனுஷ்
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான முதல் படம் பொல்லாதவன். தனுஷிற்கு கமர்சியல் ரீதியாக பெரிய மார்கெட்டை கொடுத்த படம் பொல்லாவதன். இதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான ஆடுகளம் திரைப்படம் ஆறு தேசி விருதுகளை வென்றது. தனுஷ் செல்வராகவன் போல தனுஷ் வெற்றிமாறன் காம்போவுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது . வடசென்னை , அசுரன் என இதுவரை வெற்றிப்பாதையில் மட்டுமே பயணித்து வருகிறது.
தனுஷ் வெற்றிமாறன் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற இருப்பதாக ஆர்.எஸ் என்ஃபோடெயின்மெண்ட் அறிவிப்பு வெளியிட்டது. ரசிகர்களுக்கு இது பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது.
தனுஷைக் கேட்காமல் வெளியானதா அறிவிப்பு ?
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. ஆர்.எஸ் என்ஃபோடெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்தது. சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விடுதலை படத்திற்கு திரையரங்கில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. விடுதலை 2 படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை வெற்றிமாறன் ஈடுசெய்ய வெற்றிமாறன் இன்னொரு படத்தை எடுத்து தருவதாக சொல்லியிருக்கலாம் என பேசப்பட்டது. இந்த அறிவிப்பு தொடர்பாக தனுஷ் வெற்றிமாறன் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
இந்த பட அறிவிப்பை வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தனுஷை கேட்காமலே வெளியிட்டதாகவும் இதனால் தனுஷ் கடுப்பாகிவிட்டதாகவும் பிஸ்மி தெரிவித்துள்ளார். மேலும் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்னும் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிராமல் இருப்பதையும் பிஸ்மி சுட்டிக்காட்டியுள்ளார்.
தனுஷை அப்செட் ஆக்கிய வெற்றிமாறன் படம்#Dhanush | #VetriMaaran | #valaipechu pic.twitter.com/otKXlVCT9H
— வலைப்பேச்சு (@valaipechu) January 20, 2025
தனுஷ் தற்போது இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார். டீன் ஏஹ் டிராமாவாக உருவாகியிருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது

