Rasipalan January 16: காணும் பொங்கலில் கும்பத்துக்கு வெற்றி; மேஷத்துக்கு அனுகூலம் - இன்றைய ராசி பலன்!
Rasi Palan Today, January 16, 2025: இன்று தை மாதம் 3-ம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today January 16, 2025:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...
மேஷம்:
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மறைமுகமாக கிடைக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
ரிஷபம்:
எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். கூட்டாளிகள் வழியில் அனுசரித்துச் சென்றால் லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பொறுமை நிறைந்த நாள்.
மிதுனம்:
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
கடகம்:
நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகளை குறைக்க இயலும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
சிம்மம்:
வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். பயண விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். போட்டிகள் மேம்படும் நாள்.
கன்னி:
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுற்றுலா துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். முயற்சி ஈடேறும் நாள்.
துலாம்:
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். உழைப்பு மேம்படும் நாள்.
விருச்சிகம்:
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். கலைத் துறைகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். பிற மொழி பேசும் மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
தனுசு:
மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளை பெறவும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
மகரம்:
வியாபார முன்னேற்றத்திற்கான அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நிர்வாக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். அரசு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
கும்பம்:
கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபகாரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
மீனம்:
உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் சார்ந்த விஷயங்களுக்கு தீர்வுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. தடங்கல் மறையும் நாள்.