மேலும் அறிய
Advertisement
’மன்னார்குடியை தனி மாவட்டம் ஆக்குங்கள்’ தீர்மானம் போட்ட சங்கங்கள்..!
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். 150 ஆண்டுகள் பழமைமிக்க கட்டமைப்புகளை கொண்ட மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது
ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்து, மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சியினர் சேவை சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியை தலைநகரமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் இதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மீண்டும் மறுவரையறை செய்ய வேண்டும் என மன்னார்குடியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மன்னார்குடி நகரம் 155 ஆண்டு கால நகராட்சியை கொண்ட பழமையான நகரம். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்திலேயே அதிக அளவு சுதந்திரப்போராட்ட வீரர்கள் பங்கேற்ற நகரம். தேசியம், திராவிடம், பொதுவுடமை, கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் இந்த பகுதியில் உருவாகி தமிழக அரசியலுக்கு வழிகாட்டியாக திகழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய சூழலில் மன்னார்குடி நகரத்தை மாவட்டத் தலைநகரமாக தரம் உயர்த்த வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளாக மன்னார்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை பரிசீலிக்க படாமல் உள்ளது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், மன்னார்குடியில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து ஆலோசனை கூட்டம் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் அமைப்பின் தலைவர் காவிரி எஸ். ரங்கநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள்z, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு சேவை சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய, 10 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்கின்ற அடிப்படையில், குறைந்தபட்சம் இதனை 6 மாவட்டங்களாக தற்போது உருவாக்க முடியும். அதன்படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். 150 ஆண்டுகள் பழமைமிக்க கட்டமைப்புகளை கொண்ட மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். அந்த மாவட்டத்தில் மன்னார்குடி நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் வருவாய் வட்டங்கள், அதுபோல் நிலுவையில் உள்ள முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தையும் இணைப்பதோடு, பட்டுக்கோட்டை வருவாய் வட்டத்திலுள்ள மதுக்கூர் நகரத்தையும், வட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி நகரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் வட்டங்களை உருவாக்கி, மேற்கண்ட வட்டங்களை இணைத்து, மன்னார்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக தமிழக அரசை பல்வேறு வகையிலும் வலியுறுத்துவது எனவும், இந்த தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மன்னார்குடி மக்கள் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion