நீயா? நானா? போட்டி: தஞ்சையில் விற்பனை ரேஸில் ஓட்டமாய் ஓடும் நாவல் பழம், அன்னாசிப்பழம்
இப்போ நான்தான் கிங் என்று தஞ்சையில் நாவல் பழம் விற்பனை சக்கைப்போடு போட்டு வருகிறது. கூடவே விட்டேனா பார் என்று ரேஸில் முந்த அன்னாசிப்பழமும் மோதுகிறது.
தஞ்சாவூர்: இப்போ நான்தான் கிங் என்று தஞ்சையில் நாவல் பழம் விற்பனை சக்கைப்போடு போட்டு வருகிறது. கூடவே விட்டேனா பார் என்று ரேஸில் முந்த அன்னாசிப்பழமும் மோதுகிறது. இந்த இரண்டு பழங்களையும் மக்கள் வாங்கி செல்வதுதான் ஹைலைட்.
மருத்துவக்குணங்கள் கொண்ட நாவல், அன்னாசிப்பழம்
நாவல் பழம் மருத்துவகுணம் கொண்டது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவது நல்லது. கல்லீரல் கோளாறுகள், குடல் புண் ஆகியவற்றுக்கும் மருந்தாக உள்ளது. இதேபோல் நாவல் மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை. நாவல் மரத்தின் விதைகளை பொடி செய்து சாப்பிட வயிற்றுப் போக்கை நீக்கும், ரத்தப் போக்கை தடுக்கும், ஆஸ்துமாவை குணப்படுத்தும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும், உணவு செரிமானத்துக்கும் உதவும்.
அதேபோல் பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது. அன்னாசிப்பழத்தின் சிறப்பு... 'ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. 'ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை 'ப்ரோமிலைனு'க்கு உண்டு.
தஞ்சையில் போட்டி போட்டு விற்பனையாகும் நாவல், அன்னாசிப்பழம்
இப்படி சிறப்புகளை கொண்ட நாவல் மற்றும் அன்னாசிப்பழங்கள் விற்பனை தஞ்சையில் நீயா நானா என்பது போல் ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆரம்பித்துள்ளன. முன்னணியில் நாவல் பழம் முந்திக் கொண்டு இருக்கிறது.
தஞ்சைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாவல் பழங்கள் விற்பனைக்கு வரும். அதேபோல் கேரளாவிலிருந்து அன்னாசிபழங்களை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு நாவல் பழமும், அன்னாசிப்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. நாவல் பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நாவல் பழம் சீசன் ஆகும். தற்போது சீசன் தொடங்கியதையடுத்து தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் நாவல் பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாலையோரங்களில் விற்பனைக்காக நாவல் பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தள்ளு வண்டிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ நாவல் பழம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவக்குணம் உள்ளதால் நாவல் பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
கிலோ ரூ.250க்கு விற்கும் நாவல் பழம்
இதுகுறித்து சாலையோர நாவல் பழ வியாபாரி கூறுகையில், நாவல் பழத்தை அதிகமாக சர்க்கரை நோயாளிகள் தான் வாங்கி செல்வார்கள். சீசன் காலத்தில் மட்டும் நாவல் பழம் கிடைக்கும். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் நாவல் பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். சாலையோரங்களில் விற்பனைக்காக நாவல் பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தள்ளு வண்டிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ நாவல் பழம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் உள்ளதால் நாவல் பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் லோடு ஆட்டோவில் வைத்து அன்னாசிப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை கேரளாவில் இருந்து நேரடியாக கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் ஒருசில வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். தற்போது 2 கிலோ ரூ.120க்கு அன்னாசி பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சில விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் ரூ.100க்கு விற்பனை செய்கின்றனர்.
இப்படி மருத்துவக்குணங்கள் நிறைந்த நாவல் பழம் விற்பனை ரேசில் முந்திக் கொண்டு ஓடுகிறது. விட்டேனா பார் என்று அன்னாசிப்பழ விற்பனையில் கனஜோராக நடக்கிறது. இரண்டுக்கும் பொதுமக்கள் ஆதரவு கொடுத்து வருவதுதான் ஹைலைட்.